தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : செப் 26, 2026 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

புரட்டாசி இரண்டாவது சனி

 புரட் டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திவ்ய பிரபந்தம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் - மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் - மாலை 6:45 மணி. இடம்: ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில், 100 அடி ரோடு, இந்திரா நகர், பெங்களுரூ. தொடர்புக்கு 94 485 58116, 95381 48661.

 பிரபந்த சேவா களத்தில், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பாடப்படுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது - மாலை 6:00 மணி முதல், இரவு 7:30 மணி வரை. இடம்: பான் பெருமாள் கோவில், ஹலசூரு.

உறியடி உற்சவம்

 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாராயணம்- - காலை 6:00 மணி; திருமஞ்சனம் ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்ரம் -- காலை 7:00 மணி; மகா சுதர்சன ஹோமம், மங்களாரத்தி- - காலை 9:00 மணி; உறியடி உற்சவம் -- மாலை 5:00 மணி; சுவாமி நகர்வலம்- - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ நம்பெருமாள் கோவில், ஆண்டர்சன்பேட்டை.

 புரட்டாசி 2ம் சனிக்கிழமையை முன்னிட்டு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மகா மங்களாரத்தி பிரசாத விநியோகம் -- காலை 6:00 மணி முதல். இடம்:- ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில், கீதா சாலை ராபர்ட்சன்பேட்டை.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

பரதநாட்டிய நிகழ்ச்சி

 பூர்ணாலய நடன பள்ளியின் மாணவி பாவனாக்ருதி பட்டலாவின் பரதநாட்டியம் - மாலை 5:00 மணி முதல். இடம்: இந்திராநகர் சங்கீத சபா, ஹெச்.ஏ.எல்., 2 வது ஸ்டேஜ், இந்திராநகர்.

பொதுக்குழு கூட்டம்

 பெங்களூரு ஆஸ்போர்ன் ரோடு முதலியார் சங்கத்தின் 97வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், வரவு, செலவு கணக்கு தாக்கல் - மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை; சங்கத்தின் நிர்வாக கமிட்டி தேர்தல் - மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை; புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன், முதலியார் சமூகத்தின் எதிர்கால வாய்ப்புகள் குறித்து உரை - மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 வரை; விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - இரவு 7:30 மணி முதல் இரவு 8:30 மணி; ஒருபோதும் கைவிடாத ஆன்மா' என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் குமரன் சம்பத்துக்கு, பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத் விருது வழங்கி கவுரவிப்பு. இடம்: வி.எஸ்.லோகநாதன் முதலியார் கன்வென்ஷன் ஹால், முதலியார் சங்க அலுவலகம், ஆஸ்போர்ன் ரோடு.

மருத்துவ முகாம்

 ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை வளாகம், லலிதா - திரிபுரா சாலை, மைசூரு. தொடர்புக்கு 0821 - 254 z231, 95918 10699.

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

இசை

 கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

 சாண்டில்வுட், பாலிவுட் பாடல் கள் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ராகம் கபே, 59/1, 'ஜி' பிளாக், ஏழாவது பிரதான சாலை, 19வது குறுக்கு சாலை, பைட்ராயனபுரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us