/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தந்தை இறந்த சோகத்திலும் பி.காம்., தேர்வு எழுதிய மகன்
/
தந்தை இறந்த சோகத்திலும் பி.காம்., தேர்வு எழுதிய மகன்
தந்தை இறந்த சோகத்திலும் பி.காம்., தேர்வு எழுதிய மகன்
தந்தை இறந்த சோகத்திலும் பி.காம்., தேர்வு எழுதிய மகன்
ADDED : ஜன 06, 2026 12:48 AM

தங்கவயல்: உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை இறந்த சோகத்திலும் அவரது மகன் பி.காம்., முதலாம் ஆண்டு தேர்வு எழுதினார்.
தங்கவயல் கென்னடீஸ் வட்டத்தைச் சேர்ந்தவர் கிடியோன், 62. இவர், சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் 10 நாட்களாக, கோலாரில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஐ.சி.யு., பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவரது ஒரே மகன் காட்வின், 19. இவர், தங்கவயலில் உள்ள அரசு முதல்நிலை கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.காம்., படித்து வருகிறார். மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தந்தையுடன் இருந்து, அவரை கவனித்து வந்தார். பி.காம்., தேர்வு நடந்து வரும் நிலையில், தந்தையுடன் இருந்தும் தனது படிப்பு மீதும், அவர் அக்கறை செலுத்தி படித்து வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, கிடியோன் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் தங்கவயலுக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி சடங்கிற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
இதே நேரம், அவரது மகன் காட்வின், நேற்று நடந்த முதலாம் ஆண்டு இறுதி தேர்வை எழுதினார்.
தந்தை இறப்பின் சோகத்தின் மத்தியிலும் மனம் சோர்ந்து போகாமல், தேர்வு எழுதிய பின் வீடு திரும்பி தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.

