தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராகுலுக்கு அழுத்தம் கொடுத்த சோனியா பேரனுக்காக மனம் மாறிய தாத்தா

 ராகுலுக்கு அழுத்தம் கொடுத்த சோனியா பேரனுக்காக மனம் மாறிய தாத்தா

 ராகுலுக்கு அழுத்தம் கொடுத்த சோனியா பேரனுக்காக மனம் மாறிய தாத்தா


ADDED : மே 29, 2026 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 12:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்து இருப்பதன் மூலம், கர்நாடக அரசியலில் நிலவிய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று சித்தராமையா, சிவகுமார் இடையில் கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டு இருந்ததால் தான், சித்தராமையா ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையாக வேறு காரணங்கள் உள்ளன.

சித்தராமையாவுக்கு ராகேஷ், யதீந்திரா என்று இரண்டு மகன்கள். தனது அரசியல் வாரிசாக ராகேஷை தான் சித்தராமையா பார்த்தார். அவரும் தந்தைக்காக களத்தில் இறங்கி வேலை செய்தார்.

கடந்த 2016ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டிற்கு சுற்றுலா சென்ற ராகேஷ் உடல்நலக்குறைவால் 39 வயதில் மரணம் அடைந்தார். இது, சித்தராமையாவை நிலைகுலைய செய்தது. வேறு வழியின்றி அரசியல் அனுபவம் இல்லாத, டாக்டரான 2வது மகன் யதீந்திராவை, அரசியலுக்கு கொண்டு வந்தார்.

ராகுலின் டீலிங்

கடந்த 2018 தேர்தலில் மகன் யதீந்திராவை தனது தொகுதியான வருணாவில் நிறுத்தி, வெற்றி பெற செய்தார். ஆனால் இரு தொகுதிகளில் போட்டியிட்ட சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்றார்.

ஆனாலும் பாதாமி தொகுதியில் வெற்றி பெற்றதால் அவர் அரசியல் வாழ்க்கைக்கு உயிர் கிடைத்தது. 2023 தேர்தலில் சித்தராமையாவுக்காக வருணா தொகுதியை, யதீந்திரா விட்டு தந்தார். யதீந்திராவுக்கு எம்.எல்.சி., பதவி கிடைத்தது.

தனக்கு பின், யதீந்திரா அரசியலில் வலுவாக இருக்க வேண்டும் என்று, சித்தராமையா நினைத்தார். முதல்வர் பதவியை விட்டு கொடுத்தால் யதீந்திராவுக்கு துணை முதல்வர் பதவி தருவதாக, ராகுல் டீலிங் பேசியதாக கூறப்படுகிறது. மகனின் அரசியல் வாழ்க்கைக்காக சித்தராமையா ஒப்பு கொண்டார்.

ஆட்சி கவிழும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்து, எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு அணியாக பிரிந்தால் ஆட்சி கவிழ்ந்து விடும். ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய் விடும் என்பதை கருதி, யதீந்திரா, பேரன் தவான் ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ராஜினாமா முடிவை சித்தராமையா எடுத்து உள்ளார்.

மேலிட பேச்சை கேட்டு ராஜினாமா செய்து இருப்பதால், மேலிட தலைவர்களின் நல்லெண்ணத்தில் இடம் பிடிப்பதுடன், தேசிய அரசியலுக்கு செல்லாமல், கர்நாடக அரசியலில் இருந்தே நினைத்ததை, சாதித்து விடலாம் என்றும் அவர் முடிவு செய்து உள்ளார்.

சித்தராமையாவே, 5 ஆண்டுகளும் முதல்வராக இருக்கட்டும் என்றே ராகுல் நினைத்து உள்ளார். ஆனால் சோனியா, பிரியங்காவின் ஆதரவை சிவகுமார் பெற்று இருந்தார். கட்சிக்காக சிறைக்கு சென்று உள்ளார்; அவரது தியாகத்தை மதிக்க வேண்டும் என்று, சோனியாவும், பிரியங்காவும் கொடுத்த அழுத்தத்தால் தான், சித்தராமையாவை ராஜினாமா செய்யும்படி, ராகுல் கூறியதும் தெரிய வந்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us