/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தென்மேற்கு ரயில்வேக்கு நவம்பரில் ரூ.791 கோடி வருவாய்
/
தென்மேற்கு ரயில்வேக்கு நவம்பரில் ரூ.791 கோடி வருவாய்
தென்மேற்கு ரயில்வேக்கு நவம்பரில் ரூ.791 கோடி வருவாய்
தென்மேற்கு ரயில்வேக்கு நவம்பரில் ரூ.791 கோடி வருவாய்
ADDED : டிச 03, 2025 06:38 AM
பெங்களூரு: தென்மேற்கு ரயில்வேக்கு, சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து மூலமாக, நவம்பரில், 791 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சரக்குகள் கொண்டு செல்வதால், தென்மேற்கு ரயில்வேக்கு கிடைக்கும் வருவாய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நவம்பரில், 4.469 மில்லியன் டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டன. இவற்றில் இரும்புதாது, இரும்பு பொருட்கள், உரம் உட்பட பல்வேறு பொருட்கள் அடங்கும். இதன் மூலம், 451 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
கடந்த 2024ல், இதே காலகட்டத்தில், சரக்கு போக்குவரத்து 3.941 மில்லியன் டன்னாக இருந்தது. நடப்பாண்டு நவம்பரில், தென்மேற்கு ரயில்வே இயக்கிய ரயில்களில்,
14.8 மில்லியன் பயணியர் பயணித்து உள்ளனர். இதில், 297 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதர வருவாய் 42.75 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மொத்தம், 790.75 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், 28 சதவீதம் அதிகம்.
நடப்பு நிதியாண்டில் நவம்பர் வரை, 33.292 மில்லியன் டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட, 17.5 சதவீதம் அதிகம்.
தென்மேற்கு ரயில்வேயில் மொத்த வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது. நவம்பர் வரையிலான பயணியர் போக்குவரத்தால் 2,247 கோடி ரூபாய், சரக்கு போக்குவரத்தால், 3,458 கோடி ரூபாய் உட்பட 6,072.31 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 15.12 சதவீதம் அதிகமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

