sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ரயில் நிலையங்களில் ஏ.ஐ., கேமரா தென்மேற்கு ரயில்வே திட்டம்

/

ரயில் நிலையங்களில் ஏ.ஐ., கேமரா தென்மேற்கு ரயில்வே திட்டம்

ரயில் நிலையங்களில் ஏ.ஐ., கேமரா தென்மேற்கு ரயில்வே திட்டம்

ரயில் நிலையங்களில் ஏ.ஐ., கேமரா தென்மேற்கு ரயில்வே திட்டம்


ADDED : மே 14, 2025 11:08 PM

Google News

ADDED : மே 14, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பயணியரின் பாதுகாப்புக்காகவும், குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், ரயில் நிலையங்களில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட, கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, தென்மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

நாடு முழுதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கண்காணிப்பு ஏ.ஐ., கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மெட்ரோ ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சாலைகள் உட்பட அனைத்து இடங்களிலும் இத்தகைய கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

தற்போது ரயில் நிலையங்களிலும், ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தும் பணிகளை, தென்மேற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏ.ஐ., கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ரயில்வே முன்வந்துள்ளது.

குற்ற பின்னணி உள்ள நபர், ரயில் நிலையத்துக்குள் நுழைந்தால், ஏ.ஐ., கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ள சர்வரில் இருந்து ஆர்.பி.எப்., ஊழியர்களுக்கு தகவல் செல்லும். அந்நபரின் நடவடிக்கையை கண்காணிக்கும்.

ஏ.ஐ., கேமராவுக்கும், மினிஸ்டரி ஆப் எலக்ட்ரானிக் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி சர்வருடன், நேரடி இணைப்பு இருப்பதால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பது எளிது. 105 கோடி ரூபாய் செலவில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மொத்தம் 228 ரயில் நிலையங்களில் ஏ.ஐ., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. 14 ரயில் நிலையங்களில் 'நிர்பயா' திட்டத்தின் நிதியில் இருந்தும், 214 நிலையங்களில் ரயில்வே சார்பிலும் பொருத்தப்படுகின்றன.

அனைத்து கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், 30 நாட்கள் சேமித்து வைக்கப்படும். ஏற்கனவே மைசூரு பிரிவின், 31 ரயில் நிலையங்களில் ஏ.ஐ., கேமராக்கள் செயல்படுகின்றன. இவை வெற்றிகரமாக இயங்குகின்றன.

வரும் செப்டம்பர் மாதத்துக்குள், பெங்களூரு, ஹூப்பள்ளி பிரிவுகளில், கேமராக்கள் பொருத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us