தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உடல் எடையை குறைக்க சோயா ஓட்ஸ் சில்லா!

 உடல் எடையை குறைக்க சோயா ஓட்ஸ் சில்லா!

 உடல் எடையை குறைக்க சோயா ஓட்ஸ் சில்லா!


ADDED : மே 23, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 03:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

இன்றைய காலத்தில், உடல் எடையை குறைத்து, ஆரோக்கியமாக இருக்க பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதற்காக உணவு கட்டுப்பாடு கடைபிடிக்கின்றனர். உடலை ஆரோக்கியத்தை காப்பாற்ற, உடற்பயிற்சி மட்டும் போதாது.

உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, காலை சிற்றுண்டி, நாள் முழுதும் நமக்கு தேவையான சக்தியை அளிக்கிறது. எனவே, காலை சிற்றுண்டி ஆரோக்கியமானதாக ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

உடல் எடையை குறைக்க விரும்புவோர், உணவில் ஓட்ஸ், சோயா சங்க்ஸ் சேர்த்து கொள்ளலாம். இவற்றை பயன்படுத்தி சோயா ஓட்ஸ் சில்லா செய்யலாம். இது, வட மாநிலங்களில், பிரபலமான சிற்றுண்டியாகும். இதை எப்படி செய்வது என, பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கப் (மிக்ஸியில் பொடித்தது)

சோயா சங்க்ஸ் - கால் கப் (சுடுநீரில் ஊறவைத்து அரைத்தது)

கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 4

உப்பு - தேவையான அளவு

சீரகம் - 1 ஸ்பூன்

மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்

மிளகாய் துாள் - 1 ஸ்பூன்

எண்ணெய் / நெய் - தேவையான அளவு

குடமிளகாய் - 1

கெட்டித்தயிர் - நான்கைந்து ஸ்பூன்

கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

பன்னீர் - 1 கப்

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

முதலில், மிக்சியில் ஓட்ஸ், சோயா சங்க்ஸ், கறிவேப்பிலை, தயிர், பச்சை மிளகாய், சீரகம், சுவைக்கு தேவையான உப்பு, மஞ்சள் துாள், மிளகாய் துாள் சேர்த்து, தேவையான அளவில் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். இந்த மாவு அதிக கெட்டியாகவும் இருக்க கூடாது. தளர்வாகவும் இருக்க கூடாது; தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

குடமிளகாய், தக்காளி, வெங்காயம், கொத்துமல்லியை பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் தோசைக்கல் வைத்து, எண்ணெய் தடவவும். சூடானதும் தோசை வார்க்கவும். அதன் மீது, நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், கொத்துமல்லி, துருவிய பன்னீரை துாவவும். சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.

மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்த பின், மற்றொரு பக்கம் திருப்பி போடவும்.

இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்தால், சுவையான சோயா ஓட்ஸ் சில்லா தயார். காலை சிற்றுண்டிக்கு ஏற்றது. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன், தேவையற்ற பசியை கட்டுப்படுத்தும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us