ADDED : ஜூன் 06, 2026 03:59 AM

அ நிறம் | அளவு
தங்கவயல்: பங்கார்பேட்டையில் இருந்து மாரிகுப்பம் வரையிலான ரயிலில் நேற்று தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவன்ஷு ராஜ்புத், பயணியரை சந்தித்து குறைகளை கேட்டார்.
ரயிலில் பயணியருக்கு உரிய பாதுகாப்பு இல்லை. போதையில் சிலர், பிற பயணியருக்கு தொல்லை கொடுக்கின்றனர்.
பயந்து பயந்து பயணம் செய்வதாக புகார்கள் வந்துள்ளதை தொடர்ந்து, நேற்று திடீரென பங்கார்பேட்டையில் இருந்து மாரிகுப்பம் வரையில் செல்லும் ரயிலில் தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவன்ஷு ராஜ்புத் தலைமையில் போலீசார் ஒவ்வொரு பெட்டியிலும் சென்று பயணியரின் குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது கூறிய எஸ்.பி., ராஜ்புத்,''ரவுடிகளை அடக்கவும், போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
