தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாவணகெரே ரவுடிகளுக்கு எஸ்.பி., கடும் எச்சரிக்கை

 தாவணகெரே ரவுடிகளுக்கு எஸ்.பி., கடும் எச்சரிக்கை

 தாவணகெரே ரவுடிகளுக்கு எஸ்.பி., கடும் எச்சரிக்கை


ADDED : ஜூலை 22, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: ''குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகள் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என தாவணகெரே எஸ்.பி., சேகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தாவணெகேர டவுனில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று ரவுடிகளின் அணிவகுப்பு நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் பங்கேற்றனர். மாவட்ட எஸ்.பி., சேகர் பேசியதாவது:

தாவணகெரேவில் 468 பேர் ரவுடி பட்டியலில் உள்ளனர். இதில், 145 பேர் தாவணகெரே நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இரண்டு நாட்களுக்கு முன் ஒவ்வொரு ரவுடிகளின் வீடுகளிலும் திடீர் சோதனை நடந்தது. இது வெறும் 'டிரெயிலர்' மட்டுமே. வரும் மாதங்களில் தசரா, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பல பண்டிகைகள் வர உள்ளன.

பண்டிகை நாட்களில் ரவுடிகள் குற்ற செயலில் ஈடுபட்டால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். நீங்கள் யாரோடு தொடர்பில் இருக்கிறீர்கள் என்பது கண்காணிக்கப்படுகிறது. அனைவரும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கின்றனர். ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். திருந்தி வாழ முயற்சியுங்கள். இல்லையெனில், தண்டனையும் கடுமையாக தான் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us