தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.6,000 கோடிக்கு முதலீடு செய்ய விண்வெளி துறை நிறுவனம் ஆர்வம்

 ரூ.6,000 கோடிக்கு முதலீடு செய்ய விண்வெளி துறை நிறுவனம் ஆர்வம்

 ரூ.6,000 கோடிக்கு முதலீடு செய்ய விண்வெளி துறை நிறுவனம் ஆர்வம்


ADDED : மே 21, 2026 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 01:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கர்நாடகாவில், 6,000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய, விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது,'' என, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறி உள்ளார்.

விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனமான ஆக்சிஸ்கேட்ஸ் ஏரோபேஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவன அதிகாரிகளுடன், பெங்களூரு கனிஜா பவனில், தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், துறையின் முதன்மை செயலர் செல்வகுமார், கமிஷனர் குஷ்பு கோயல் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பின், எம்.பி.பாட்டீல் கூறியதாவது:

ஆக்சிஸ்கேட்ஸ் ஏரோபேஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், கர்நாடகாவில் 6,000 கோடி ரூபாயில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறது. 200 ஏக்கரில் விண்வெளி, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த உற்பத்தி, சோதனை, பராமரிப்பு மையத்தை அமைப்பது அவர்கள் குறிக்கோளாக உள்ளது.

இந்த நிறுவனம் முதலீடு செய்த பின், மாநிலத்தில், 20,000 பேருக்கு நேரடி, 54,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும்.

முதல் கட்டத்தில், 1,209 கோடி ரூபாய்; 2வது கட்டத்தில் 2,898 கோடி ரூபாய்; மூன்றாவது கட்டத்தில் 1,512 கோடி ரூபாய் முதலீடு செய்வர். தங்கள் திட்டத்தை செயல்படுத்த தேவனஹள்ளி அருகே நிலம் கேட்டு உள்ளனர்.

உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய, 1.8 கி.மீ., நீளமுள்ள ஓடுபாதையை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்காக ஹாசன், விஜயபுரா, ஷிவமொக்கா விமான நிலையங்களை பரிசீலிக்கலாம் என்றும் கேட்டு கொண்டு உள்ளனர். இதற்கான பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us