/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
செப்டம்பர் 8ல் பெங்களூரில் சபாநாயகர்கள் மாநாடு
/
செப்டம்பர் 8ல் பெங்களூரில் சபாநாயகர்கள் மாநாடு
ADDED : மே 09, 2025 11:40 PM

மங்களூரு: “பெங்களூரில் வரும் செப்டம்பரில், அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடக்கவுள்ளது. கர்நாடகாவில் முதன் முறையாக, இந்த மாநாடு நடக்கிறது,” என, சபாநாயகர் காதர் தெரிவித்தார்.
இது குறித்து, மங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
செப்டம்பர் 8 முதல் 10 வரை, பெங்களூரில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடக்கவுள்ளது. வரலாற்றில் முதன் முறையாக, மாநாடு நடத்தும் வாய்ப்பு, கர்நாடகாவுக்கு கிடைத்துள்ளது.
பெங்களூரில் எந்த இடத்தில், மாநாடு நடத்துவது என்பது முடிவாகவில்லை. செப்டம்பர் 11ம் தேதி மாநாட்டில் பங்கேற்கும் சபாநாயகர்களை, சுற்றுலா அழைத்துச் செல்ல ஆலோசிக்கப்படுகிறது.
அவர்களை மங்களூரு, மைசூரு, பேலுார் - ஹளேபீடு ஆகிய மூன்று இடங்களில், ஏதாவது ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று காட்டுவோம்.
சபாநாயகர், மேல்சபை தலைவர் தலைமையில் இந்த மாநாடு நடக்கும். நாட்டின் அனைத்து மாநிலங்களின் சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், மேல்சபை தலைவர்கள், துணை தலைவர்கள், செயலர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்பர்.
ஜனநாயகத்தை பலப்படுத்துவது, ஜனநாயகத்தில் சபாநாயகர்களின் பங்களிப்பு உட்பட, பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.
செப்டம்பர் 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு, விதான்சவுதாவில் லோக்சபா சபாநாயகர் முன்னிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநாட்டை துவக்கி வைப்பார். துவக்க விழா, நிறைவு விழாவுக்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.