/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சரவை மாற்றத்தில் பெங்களூருக்கு சபாநாயகர் பதவி? தினேஷ் குண்டுராவுக்கு அதிக வாய்ப்பு
/
அமைச்சரவை மாற்றத்தில் பெங்களூருக்கு சபாநாயகர் பதவி? தினேஷ் குண்டுராவுக்கு அதிக வாய்ப்பு
அமைச்சரவை மாற்றத்தில் பெங்களூருக்கு சபாநாயகர் பதவி? தினேஷ் குண்டுராவுக்கு அதிக வாய்ப்பு
அமைச்சரவை மாற்றத்தில் பெங்களூருக்கு சபாநாயகர் பதவி? தினேஷ் குண்டுராவுக்கு அதிக வாய்ப்பு
ADDED : அக் 28, 2025 11:33 PM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசு அமைந்து அடுத்த மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் முடிகிறது. முதல்வர் மாற்றம் குறித்து பரபரப்பாக பேசப்படும் வேளையில், அமைச்சரவையில் இருந்து 10 முதல் 15 அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி, கட்சி மேலிடமும், முதல்வர் சித்தராமையாவும் திடீரென ஆலோசித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவையில் மாற்றம் நடக்கலாம் என்ற பேச்சு பரவலாக அடிபட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று, முதல்வரே கூறி உள்ளார். இதனால் பலரும், அமைச்சர் பதவியை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். அமைச்சராக இருக்கும் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, கட்சி பணிக்கு பயன்படுத்தவும், காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து உள்ளது. இதுபற்றி அவர்களிடம் கூறப்பட்டு உள்ளது.
பிராமண சமூகம் வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமதுகான், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர், பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறி உள்ளனர். இந்த வரிசையில் மேலும் சில அமைச்சர்கள், கட்சி மேலிட உத்தரவுப்படி தங்கள் அமைச்சர் பதவியை, ராஜினாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது.
காங்கிரசில் பிராமண சமூகத்தில் இருந்து தேஷ்பாண்டேயும், தினேஷ் குண்டுராவும் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். மூத்த தலைவரான தேஷ்பாண்டே, தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். அமைச்சர் பதவியை தன்னிடம் இருந்து வாங்கினால், தனக்கு சபாநாயகர் பதவி வேண்டும் என்று தினேஷ் குண்டுராவ் கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பெருமை இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், 'காந்திநகர் தொகுதியில் இருந்து, தினேஷ் குண்டுராவ் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று உள்ளார். தற்போது சுகாதார அமைச்சராக இருக்கும் அவர், இதற்கு முன்பும் பல துறைகளை கையாண்டு உள்ளார். அமைச்சர் பதவியை விட்டு தரும்படி கட்சி மேலிடம் கேட்டு கொண்டால், யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது.
'கர்நாடக காங்கிரஸ் தலைவர், பொது செயலர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உட்பட, கட்சியின் பல பொறுப்புகளை திறம்பட நிர்வகித்து உள்ளார். சட்டசபையை திறம்பட நடத்தும் திறமையும் அவரிடம் உள்ளது. கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கும் என்பதை, பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்,'' என்றனர்.
கர்நாடகா சட்டசபை, கடந்த 1952 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. தற்போது பதவியில் இருக்கும் காதர் 17வது சபாநாயகர். இவருக்கு முன்பு பதவியில் இருந்த 16 பேரும் ஹிந்துக்கள். காதர் தான் முதல் முஸ்லிம் சபாநாயகர். ஆனால் அவர், தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டு வருகிறார்.
அமைச்சரவையில் மாற்றம் நடந்து காதர் அமைச்சரானால், தினேஷ் குண்டுராவ் சபாநாயகர் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெங்களூரு எம்.எல்.ஏ.,க்கள் யாரும் இதுவரை, சபாநாயகர் பதவியில் இருந்தது இல்லை.
தினேஷ் குண்டுராவ் அந்த பதவிக்கு வந்தால், பெங்களூரில் இருந்து முதல் சபாநாயகர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும். இந்த மாற்றத்தில் வேறு யாருக்காவது சபாநாயகர் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
- நமது நிருபர் -

