/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு, சாம்ராஜ் நகர் மேம்பாட்டுக்கு ரூ.3,647 கோடி சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
/
மைசூரு, சாம்ராஜ் நகர் மேம்பாட்டுக்கு ரூ.3,647 கோடி சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
மைசூரு, சாம்ராஜ் நகர் மேம்பாட்டுக்கு ரூ.3,647 கோடி சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
மைசூரு, சாம்ராஜ் நகர் மேம்பாட்டுக்கு ரூ.3,647 கோடி சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
ADDED : ஏப் 25, 2025 05:46 AM

சாம்ராஜ் நகர்: ''சாம்ராஜ் நகர், மைசூரு மேம்பாட்டுக்கு, 3,647 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
சாம்ராஜ் நகர் மாவட்டம், மலை மஹாதேஸ்வரா மலையில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின், முதல்வர் அளித்த பேட்டி:
மலை மஹாதேஸ்வரா மலையில், வரலாற்று சிறப்பு மிக்க அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. ஏற்கனவே, மாநிலத்தின் நான்கு மண்டலத்தில் அமைச்சரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
முதலில் கலபுரகியிலும், தற்போது மைசூரிலும் நடந்துள்ளது. வரும் நாட்களில் பெலகாவி மண்டலத்தின் விஜயபுராவிலும், பெங்களூரின் நந்தி மலையிலும் நடத்தப்படும்.
ரூ.3,647 கோடி
கலபுரகியின் 56 விஷயங்கள் குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது, மைசூரில் 78 விஷயங்களில் பொதுப்பணி துறை, நீர்ப்பாசனம், சொட்டு நீர்ப்பாசனம், மின்சாரம், சுகாதாரம், ஏரிகளுக்கு தண்ணீர், மலைவாழ் மேம்பாடு, கிராமங்களுக்கு சாலை அமைப்பது என 3,647 கோடி ரூபாய் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மனித - விலங்கு மோதலை தடுக்க, ரயில் தண்டவாள தடுப்புகள் அமைக்க 210 கோடி ரூபாய்; மலைவாழ் மக்கள் வாழும் பகுதி மேம்பாட்டுக்கு 237 கோடி ரூபாய்; நீர்ப்பாசன திட்டத்துக்கு 1,787 கோடி ரூபாய்.
குடிநீர் திட்டத்துக்கு 317 கோடி ரூபாய்; கொள்ளேகாலில் சுகாதார சீரமைப்புக்காகவும், மாவட்ட மருத்துவமனை கட்டவும் 210 கோடி ரூபாய்; சுற்றுலா துறை மேம்பாடு, தாலுகா பவன், ஹனுாரில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தாலுகா மருத்துவமனை கட்டவும் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் மைதானம்
மைசூரின் இலவாளாவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்ட நிலம் ஒதுக்கப்படும். பாரத் ஜோடோ யாத்திரையின் போது, பதனவாலு கிராமத்திற்கு சென்றோம். அங்குள்ள காதி கிராம தொழிற்சாலை மைய மேம்பாட்டுக்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். முதல் கட்டமாக 20 கோடி ரூபாய் இந்தாண்டு வழங்கப்படும்.
மைசூரு விமான நிலையம் ஓடுபாதை விஸ்தரிக்க, நிலம் வழங்கப்படும். பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம், 30 கோடி ரூபாயில், அருங்காட்சியகமாக மாற்றப்படும். சாம்ராஜ் நகர், மைசூரு மாவட்டங்களில் ஏரிகள் நிரப்பப்படும்; மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். சாம்ராஜ் நகரில் புதிய சுற்றுலா மையம் கட்டப்படும். குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதி செய்ய, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.