/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜூன் 19ல் நந்திமலையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம்
/
ஜூன் 19ல் நந்திமலையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம்
ADDED : ஜூன் 04, 2025 01:18 AM

சிக்கபல்லாபூர் : நந்திமலையில் இம்மாதம் 19ம் தேதி சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடக்க இருப்பதாக, சிக்கபல்லாபூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.சி.சுதாகர் கூறி உள்ளார்.
கர்நாடக அமைச்சரவை கூட்டம் மாதத்தில் ஒரு முறை, பெங்களூரு விதான் சவுதாவில் நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பரில் கலபுரகியில் நடந்தது. கல்யாண - கர்நாடகா வளர்ச்சிக்காக அங்கு கூட்டம் நடந்ததாக சொல்லப்பட்டது.
இதுபோல கடந்த ஏப்ரலில், சாம்ராஜ் நகரின் மலை மாதேஸ்வரா மலையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. சாம்ராஜ்நகர், மைசூரு, மாண்டியா, ஹாசன் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக உயர்கல்வி அமைச்சரும், சிக்கபல்லாபூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எம்.சி.சுதாகர் நேற்று அளித்த பேட்டி:
சாம்ராஜ்நகரில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்த பின், சிக்கபல்லாபூரின் நந்திமலையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதினேன். நந்திமலைக்கு மகாத்மா காந்தி இரண்டு முறை வருகை தந்தது பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, எனக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. இம்மாதம் 19 ம் தேதி நந்திமலையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தலாமா என்று கேட்டனர். சரி என்று கூறினேன்; ஏற்பாடுகள் செய்யும்படி கூறி உள்ளனர்.
இங்கு நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல் மாவட்டங்களில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்த விவாதம் நடக்கும். மூன்று மாவட்டங்களுக்கு என்ன தேவை என்பது பற்றி, முதல்வரிடம் விரிவாக எடுத்து கூறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.