தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காப்பீடு மோசடிகளை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு

 காப்பீடு மோசடிகளை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு

 காப்பீடு மோசடிகளை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு


ADDED : செப் 25, 2026 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: விபத்து காப்பீடு நிறுவனங்களிடம் போலி விபத்து ஆவணங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்க, உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சாலை விபத்துகளில் அதிகளவில் இழப்பீடு பெறுவதற்காக, சிலர் மோசடி செய்த வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்ற தார்வாட் கிளை விசாரித்தது. அப்போது நீதிபதி, 'இத்தகைய முறைகேடுகளை தடுக்கும் வகையில், எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றும் மோசடி பேர்வழிகளை தடுக்க, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இக்குழுவில், பெங்களூரு போலீஸ் தலைமையகத்தின், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யின் நேரடி பார்வையின் கீழ் விசாரணை நடக்கும்.

இந்த குழுவில், பெங்களூரு குற்றம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி சேவைகள் ஐ.ஜி., ஒரு சி.ஐ.டி., - எஸ்.பி., ஒரு டி.எஸ்.பி., மூன்று போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றிருப்பர்.

எஸ்.ஐ.டி.,க்கு அதிகாரப்பூர்வ காவல் நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது, விசாரணையை முடித்த பின், இறுதி அறிக்கையை நேரடியாக சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கும். மாநிலத்தில் காப்பீடு மோசடி தொடர்பான புகார்கள் அனைத்தும், எஸ்.ஐ.டி.,க்கு மாற்றப்படும்.

போலி விபத்துகள், சாதாரண விபத்துகளை பெரிய விபத்துகளாக காண்பித்து, அதிக காப்பீடு தொகை பெற, வக்கீல்கள், டாக்டர்கள், காப்பீட்டு முகவர்கள், அரசு ஊழியர்கள் இணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டால், அவர்கள் மீது எஸ்.ஐ.டி., கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us