/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரசவத்தில் குழந்தை இறப்பை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைப்பு
/
பிரசவத்தில் குழந்தை இறப்பை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைப்பு
பிரசவத்தில் குழந்தை இறப்பை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைப்பு
பிரசவத்தில் குழந்தை இறப்பை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைப்பு
ADDED : செப் 22, 2025 03:59 AM
பெங்களூரு : கர்நாடகாவில் பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுவை மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைத்து உள்ளது.
கர்நாடகாவில் பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பது அதிகரித்து உள்ளது. கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களிலே அதிகம் நடக்கிறது.
ஹாவேரி, தார்வாட், கதக், சாம்ராஜ்நகர், மைசூரு ஆகிய மாவட்டங்ளில் பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பது அதிகமாக காணப்படுகிறது. மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு 8,000 குழந்தைகள் இறக்கின்றன என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதை தீவிரமாக எடுத்து கொண்ட மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து உள்ளது. இந்த குழுவில் வாணி விலாஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள், அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மூத்த மகளிர் மருத்துவர்கள் ஆகியோர் இடம் பெறுவர்.
இக்குழுவினர், சமீபத்தில் பிரசவத்தின் போது நடந்த குழந்தை இறப்புகள் குறித்த விபரங்களை மாவட்ட வாரியாக சேகரிப்பர். குழந்தை இறப்புக்கான காரணத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பர். குறிப்பாக, அதிக குழந்தைகள் இறக்கும் மாவட்டங்களை முதலில் ஆய்வு செய்வர்.
இந்த குழுவினர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அறிக்கை தயார் செய்து, தலைமை செயலர் தலைமையிலான உயர் மட்டக் குழுவிடம் சமர்ப்பிப்பர். இது மட்டுமின்றி இறப்புகளை தடுக்க பரிந்துரைகளையும் வழங்குவர்.
இதுமட்டுமின்றி அரசு, தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை மருத்துவமனை நிர்வாகம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இறப்புகளை பதிவு செய்ய தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது கர்நாடக தனியார் மருத்துவமனை நிறுவன சட்டம் 2007ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோல, அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் துறை ரீதியான விசாரணையை எதிர் கொள்ள நேரிடும் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.