/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரின் கோவில்களை தரிசிக்க சிறப்பு 'டூர்' திட்டம்
/
பெங்களூரின் கோவில்களை தரிசிக்க சிறப்பு 'டூர்' திட்டம்
பெங்களூரின் கோவில்களை தரிசிக்க சிறப்பு 'டூர்' திட்டம்
பெங்களூரின் கோவில்களை தரிசிக்க சிறப்பு 'டூர்' திட்டம்
ADDED : மே 28, 2025 11:04 PM

பெங்களூரு: பெங்களூரின் பிரசித்தி பெற்ற கோவில்களை, பொதுமக்கள் தரிசனம் செய்ய பி.எம்.டி.சி., 'ஒன் டே டெம்பிள் டூர்' திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி துவக்கி வைத்தார்.
பெங்களூரில் திட்டத்தை துவக்கி வைத்து, அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசியதாவது:
பொதுமக்கள் பெங்களூரின் முக்கிய கோவில்களை தரிசனம் செய்ய வசதியாக, 'ஒன் டே டெம்பிள் டூர்' திட்டத்தை பி.எம்.டி.சி., கொண்டு வந்துள்ளது. பி.எம்.டி.சி., குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் சென்று, காளி ஆஞ்சநேயர், ராஜராஜேஸ்வரி, கருமாரி அம்மன் கோவில், ஓம்காரா ஹில்ஸ், இஸ்கான், பனசங்கரி கோவில்களை தரிசிக்கலாம்.
வார இறுதி நாட்களில், காலை 6:30 மணிக்கு மெஜஸ்டிக்கில் இருந்து புறப்படும் பஸ், கோவில்களை தரிசித்த பின், மாலை 6:00 மணிக்கு மீண்டும் மெஜஸ்டிக்கை வந்தடையும்.
பெரியவர்களுக்கு 450 ரூபாய், சிறார்களுக்கு 350 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் இறுதியில் இருந்து, கோவில் தரிசன பஸ்கள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.