தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புனித வெள்ளியை ஒட்டி ஹூப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள்

 புனித வெள்ளியை ஒட்டி ஹூப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள்

 புனித வெள்ளியை ஒட்டி ஹூப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள்


ADDED : மார் 31, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'புனித வெள்ளியை ஒட்டி, பயணியர் வசதிக்காக ஹூப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

 ரயில் எண் 07347: எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி - கொல்லம் விரைவு ரயில், ஏப்., 2ம் தேதி ஹூப்பள்ளியில் இருந்து காலை 7:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:00 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

 மறு மார்க்கத்தில் எண் 07348: கொல்லம் - எஸ்.எஸ்.எஸ்.ஹூப்பள்ளி சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து ஏப்., 3ம் தேதி காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:40 மணிக்கு ஹூப்பள்ளி வந்தடையும்.

வழித்தடம் மாற்றம்  எண் 22534: யஷ்வந்த்பூர் - கோரக்பூர் வாராந்திர அதிவேக விரைவு ரயில், ஏப்., 1, 8, 15, 22, 29, மே 6 என புதன்கிழமை தோறும் கான்பூர் சென்ட்ரல், பிரயாக்ராஜ், மா பெல்ஹா தேவி தாம் பிரதாப்கர்க், அயோத்யா வழியாக கோரக்பூர் சென்றடையும்.

 எண் 15024 யஷ்வந்த்பூர் - கோரக்பூர் வாராந்திர விரைவு ரயில், ஏப்., 2, 9, 16, 23, 30, மே 7 ம் தேதிகளில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கான்பூர் சென்ட்ரல், பிரயாக்ராஜ், மா பெல்ஹா தேவி தாம் பிரதாப்கர்க், அயோத்யா வழியாக கோரக்பூர் சென்றடையும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us