தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு -- தானாபூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

 பெங்களூரு -- தானாபூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

 பெங்களூரு -- தானாபூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்


ADDED : ஏப் 08, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பெங்களூரு - - தானாபூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தென்மேற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:

கோடை விடுமுறையை ஒட்டி, பயணியர் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பெங்களூரில் இருந்து பீஹார் மாநிலம் தானாபூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வரும், 16, 23ம் தேதிகளில் வியாழக்கிழமை இரவு 11:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் - 06549 தானாபூருக்கு 19, 26ம் தேதிகளில் அதிகாலை, 1:45 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக, 20, 27 ம் தேதிகளில் திங்கள்கிழமையன்று தானாபூரில் இருந்து காலை, 8:15 மணிக்கு புறப்படும் ரயில் - 06550, எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு, 23, 30ம் தேதிகளில் வந்து சேரும்.

கே.ஆர்.புரம், பங்கார்பேட், குப்பம், ஜோலார்பேட், காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், பல்கர்ஷா, சந்திராபூர், சேவாகிராம், நாக்பூர், இடர்சி, பிப்பரியா, ஜபல்பூர், கட்னி, சட்னா, மாணிக்பூர், பிரயாக்ராஜ், தீன் தயாள் உபத்யா, புக் ஷர் மற்றும் ஆரா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வரும் 20ம் தேதி திங்கள்கிழமை காலை 7:00 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து தானாபூருக்கு புறப்படும் ரயில் - 06579, புதன்கிழமை மதியம், 1:15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக 23ம் தேதி காலை 10:30க்கு, தானாபூரில் புறப்படும் ரயில் - 06580, வரும்,25ம் தேதி இரவு 10:00 மணிக்கு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை வந்தடையும்.

எலஹங்கா, ஹிந்துபூர், தர்மாவரம், அதோனி, மெஹபூப்நகர், கச்சேகுடா, ராமகுண்டம், பல்கர்ஷா, நாக்பூர், இடர்சி, ஜபல்பூர், கட்னி, சட்னா, மாணிக்பூர், பிரயாக்ராஜ், தீன் தயாள் உபத்யா, புக் ஷர், ஆரா ரயில் நிலையங்களில் நிற்கும்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us