/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கரிஞ்சேஸ்வரா கோவில்!
/
சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கரிஞ்சேஸ்வரா கோவில்!
ADDED : நவ 25, 2025 05:51 AM

தட்சிண கன்னடாவின் பன்ட்வால் தாலுகா, கரிஞ்சா கிராமத்தில் மலை உச்சியில் கரிஞ்சேஸ்வரா கோவில் உள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், மேற்கு தொடர்ச்சி மலையின் எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்து உள்ளது.
கோவில் அமைந்துள்ள இடத்தில் க்ருதா யுகத்தில் ரிஷி முனிவர்கள் தவம் செய்தனர் என்றும், திரேதா யுகத்தில் ராமரும், சீதையும் இந்த இடத்திற்கு வருகை தந்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
சிவன், தனது பக்தர்களுக்கு ஆசி வழங்க இந்த மலையின் மீது கரிஞ்சேஸ்வரராக எழுந்தளிருனார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.மலை உச்சியில் கோவில் இருப்பதால், அடிவாரத்தில் இருந்து 600 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும்.
படிக்கட்டுகளில் ஏறி செல்லும் போது சுற்றியுள்ள வனப்பகுதியின் அழகை ரசிக்கும் அனுபவம் கிடைக்கும்.
அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு செல்ல 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகிறது. மொத்தம் 300 படிக்கட்டுகள் ஏறியதும் விநாயகர், பார்வதி தேவியை தரிசனம் செய்யலாம். கோவிலின் மேல், கீழ் பகுதிகளில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன.
இங்கு உள்ள கதா தீர்த்தத்தை, பீமன் தனது கதாயுதத்தின் மூலம் உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. கோடை காலத்திலும் கதா தீர்த்தத்தில் தண்ணீர் இருக்கும். அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு செல்லும் போது குரங்குகள் தொல்லை அதிகமாக இருக்கும். இதனால் கவனமாக செல்ல வேண்டியது அவசியம். மஹா சிவராத்திரியை பெரிய பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
ஆண்டுதோறும் ரத உற்சவம் நடக்கிறது. தினமும் காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
- நமது நிருபர் -

