/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி
/
கோலார் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி
கோலார் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி
கோலார் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி
ADDED : ஜன 24, 2026 05:21 AM
பெங்களூரு: கோலார் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து, விளையாட்டு துறை, மாநில அரசு ஊழியர் சங்கம் இணைந்து, பிப்ரவரி 6, 7ம் தேதிகளில், மாவட்ட அளவிலான, அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலாசார போட்டிகளை நடத்துகின்றன.
இத்தகவலை அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அஜய்குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
கோலாரில் உள்ள சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா மாவட்ட விளையாட்டு அரங்கில், பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி, 6ம் தேதி காலை 11:00 மணிக்கு அமைச்சர் பைரத்தி சுரேஷ், விளையாட்டு போட்டிகளை துவக்கி வைப்பார்.
கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்பர். விளையாட்டு போட்டிகளில் 3,500க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வெற்றி பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். அதிலிருந்து, 100 பேர் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
இவ்வாறு அஜய்குமார் கூறினார்.

