தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ உலக அரங்கில் மகுடம் சூட தயாராகிறார் ஸ்பூர்த்தி ஷெட்டி

 உலக அரங்கில் மகுடம் சூட தயாராகிறார் ஸ்பூர்த்தி ஷெட்டி

 உலக அரங்கில் மகுடம் சூட தயாராகிறார் ஸ்பூர்த்தி ஷெட்டி


ADDED : ஜூலை 19, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

உடுப்பி மாவட்டம், பிரம்மாவரா பகுதியை சேர்ந்தவர் ஸ்பூர்த்தி ஷெட்டி, 27, எம்.பி.ஏ., பட்டதாரி. பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தன், 16 வயதில் மாடலிங் போட்டிகளில் பங்கேற்க துவங்கினார். உள்ளூரில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று அசத்தினார்.

முதன் முதலாக, 2018ல் மாநில அளவிலான அழகி போட்டியில் பங்கேற்றார். 'மிஸ் கர்நாடகா' அழகி போட்டியில் பங்கேற்று, மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இதன் மூலம் 'மாடலிங்' துறையில் மாநில அளவில் பிரபலம் அடைந்தார். எனினும், 'மிஸ் சவுத் இந்தியா' பட்டத்தை தட்டிச் சென்றார். 2020ல் 'குயின் ஆப் கர்நாடகா' 2021ல், 'மிஸ் இன்டர்நேஷனல் யுனிவர்ஸ்' போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

போட்டி இப்போட்டிகளில் கிடைத்த அனுபவத்தின் மூலம் தொடர்ச்சியாக தேசிய அளவிலான அழகி போட்டிகளில் பங்கேற்றார். 2024ல், 'மிஸ் கிராண்ட் இந்தியா' போட்டியில் முதல், 12 இடங்களிலும், 2026, 'மிஸ் யுனிவர்ஸ் கர்நாடகா' போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிடித்தார். இப்படி பல போட்டிகளில் பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தினார்.

இதனால், ஸ்பூர்த்தியின் பெயர், 'மாடலிங்' துறையில் நாடு முழுதும் பரவியது.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - 2026 எனும் முக்கியமான போட்டியில் பங்கேற்றுள்ளார். இப்போட்டி நேற்று துவங்கி ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடக்கிறது.

பெங்களூரு, ஜெய்ப்பூர், இந்துார், புதுடில்லி உள்ளிட்ட பல நகரங்களில் நடக்கிறது. இறுதி போட்டி புதுடில்லியில் நடக்கிறது. இதில் கர்நாடகா சார்பில் ஸ்பூர்த்தி பங்கேற்கிறார்.

முக்கியத்துவம் இப்போட்டியில் வெற்றி பெறுவோர், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அழகி போட்டியான, 75வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்பர்.

இப்போட்டி, வரும் நவம்பரில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடக்க உள்ளது. இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்பூர்த்தி தீவிரமாக பயிற்சி பெறுகிறார்.

இது குறித்து, ஸ்பூர்த்தி கூறுகையில், ''இது, என் வாழ்வின் முக்கியமான போட்டியாகும். உலக அளவில் எனது திறமையை வெளிபடுத்த ஆசைப்படுகிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி. உலக அரங்கில் நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கிறேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us