/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி தங்கவயலில் கொண்டாட்டம்
/
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி தங்கவயலில் கொண்டாட்டம்
ADDED : ஆக 16, 2025 11:16 PM

தங்கவயல்: யாதவர் சங்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா தங்கவயலில் நேற்று நடத்தப்பட்டது.
ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவை, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், ''பாண்டவர்களுக்கு தர்மத்தின் படி அனைத்திலுமே வெற்றி கிடைக்க செய்தவர் ஸ்ரீ கிருஷ்ணர். பகவத் கீதையில், உலக மனித குலத்திற்கு தர்மத்தின் நிலைப்பாட்டை எடுத்து விளக்கியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவோர் அனைத்திலுமே வெற்றி பெறுவது உறுதி,'' என்றார்.
யாதவ சமுதாயத்தில் பி.யு.சி ., எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப் படுத்தினர்.
தங்கவயல் எஸ்.பி., ஷிவாம்ஷு ராஜ்புத், தாசில்தார் பரத், அரசு ஊழியர்கள் சங்க தங்கவயல் கிளை தலைவர் நரசிம்ம மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.