/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வேண்டுதலை நிறைவேற்றும் ஸ்ரீ லட்சுமி பெட்டேராய சுவாமி கோவில்
/
வேண்டுதலை நிறைவேற்றும் ஸ்ரீ லட்சுமி பெட்டேராய சுவாமி கோவில்
வேண்டுதலை நிறைவேற்றும் ஸ்ரீ லட்சுமி பெட்டேராய சுவாமி கோவில்
வேண்டுதலை நிறைவேற்றும் ஸ்ரீ லட்சுமி பெட்டேராய சுவாமி கோவில்
ADDED : அக் 28, 2025 04:25 AM

துமகூரு மாவட்டம், நொனவினகெரே பகுதியில் ஸ்ரீ லட்சுமி பெட்டேராய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பெங்களூரில் இருந்து, 140 கி.மீ., தொலைவில் உள்ளது. இக்கோவில், 15ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசின் ஆட்சியாளரான மகாநந்தநாயக்க சோமண்ணாவால் கட்டப்பட்டது.
அடுத்து, 16ம் நுாற்றாண்டில் மைசூரின் ஆட்சியாளர்களான உடையாரின் கட்டுப்பாட்டில் கோவில் வந்தது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. அந்த சமயத்தில் கோவிலின் மைய மண்டபம் கட்டப்பட்டது.
கோவில்களின் சுவர்களில், புராணக் கதைகளை சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன. துாண்களில் சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன. கோவில் ஹொய்சாளா, விஜயநகர பேரரசின் கட்டட கலையை பிரதிபலிக்கிறது.
இந்த கோவில்
ஹிந்து மதத்தின் முக்கிய கடவுளான விஷ்ணுவுக்கும், லட்சுமி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் பிரதான தெய்வமாக ஸ்ரீ லட்சுமி பெட்டேராய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரது துணைவியரான ஸ்ரீதேவி, பூதேவிக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. லட்சுமி தேவிக்கும் தனி சன்னிதி இவை உள்ளது.
அவதாரம் இந்த கோவில் இன்றும் பழமை மாறாமல் காட்சி அளிக்கிறது. கோவில் வளாகத்திற்கு அருகில் போக்குவரத்து நெரிசல் எதுவும் இல்லாததால், கோவில் வளாகமே அமைதியாக காட்சி அளிக்கிறது. ஒவ்வொரு துாண்களிலும் வைணவ ஆழ்வார்களின் சிலைகளும், விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் உட்புறம், வெளிப்புறம் இரண்டும் அழகாக காட்சி அளிக்கிறது. கோவில் வளாகத்தில் துளசி மாடமும் காணப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை மார்ச் அல்லது ஏப்ரலில் நடக்கும் தேர் திருவிழா பிரசித்தி பெற்றது. இதில், பங்கேற்க ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் வருகை தருவர். அப்போது, அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்படும்.
நம்பிக்கை இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆரோக்கியம், நோய்களிலிருந்து விடுபட, வெற்றி, செல்வம், பாதுகாப்பு ஆகியவை குறித்து வேண்டிக்கொள்கின்றனர். அனைத்தும் பக்தர்களுக்கு நடக்கிறது. இங்கு வந்து வேண்டினால், சகலமும் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குறிப்பாக, தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் என பக்தர்கள் கூறுவதை கேட்க முடிகிறது. கோவில் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் திறந்திருக்கும்.
நமது நிருபர் -

