/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இலவசமாக கன்னடம் கற்று தரும் ஸ்ரீ சரஸ்வதி கல்வி டிரஸ்ட்
/
இலவசமாக கன்னடம் கற்று தரும் ஸ்ரீ சரஸ்வதி கல்வி டிரஸ்ட்
இலவசமாக கன்னடம் கற்று தரும் ஸ்ரீ சரஸ்வதி கல்வி டிரஸ்ட்
இலவசமாக கன்னடம் கற்று தரும் ஸ்ரீ சரஸ்வதி கல்வி டிரஸ்ட்
ADDED : மே 09, 2025 11:34 PM

ஒயிட்பீல்டு: வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வந்து வசிப்போருக்கு, ஸ்ரீ சரஸ்வதி கல்வி டிரஸ்ட் இலவசமாக கன்னடம் கற்று கொடுக்கிறது.
பெங்களூரு ஒயிட்பீல்டு இம்மாடிஹள்ளி சாலை ஹகதுாரில் உள்ளது ஸ்ரீ சரஸ்வதி கல்வி டிரஸ்ட். இந்த டிரஸ்ட்டை நடத்துபவர் டாக்டர் சுஷ்மா சங்கர். இந்த டிரஸ்டின் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வந்து வசிப்போருக்கு இலவசமாக கன்னடம் பேச, எழுத கற்று கொடுக்கப்படுகிறது.
இதுகுறித்து அவர்கூறியதாவது:
எனது சொந்த ஊர் கேரளா. பல ஆண்டுகளாக பெங்களூரில் வசிக்கிறேன். கர்நாடகா தான் எனக்கு உணவு, தண்ணீர் கொடுத்தது. இதனால் கன்னடம் மீதான விசுவாசத் தால், வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வந்து வசிப்போருக்கு, கடந்த 17 ஆண்டுகளாக இலவசமாக கன்னடம் கற்று கொடுத்து வருகிறேன்.
எங்கள் டிரஸ்ட்டை, கடந்த மாதம் அரசு அங்கீகரித்தது. தற்போது கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் எங்கள் டிரஸ்ட் வருகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கிறோம். நகரின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள், இங்கு பயிற்சிக்காக வருகின்றனர். மூன்று மாதம் பயிற்சி அளிக்கிறோம். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசிடம் இருந்தும் சான்றிதழ் வாங்கி கொடுக்கிறோம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு - 99010 41889.