தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாரா நீச்சலில் பீடு நடை போடும் ஸ்ரீதர் நாகப்பா மலகி

 பாரா நீச்சலில் பீடு நடை போடும் ஸ்ரீதர் நாகப்பா மலகி

 பாரா நீச்சலில் பீடு நடை போடும் ஸ்ரீதர் நாகப்பா மலகி


ADDED : ஜன 30, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

ஆறு வயதில் விபத்தில் கையை இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் போராடி இன்று பாரா நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று சர்வதேச அளவில் நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஸ்ரீதர் நாகப்பா மலகி.

பெலகாவி மாவட்டத்தின் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் நாகப்பா மலகி, 27. இவருக்கு மூன்று சகோதரிகள். இவருக்கு 6 வயதாக இருக்கும் போது, பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில், இவரின் இடது கையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நீச்சல் பள்ளிக்கு சென்றாலும், பாடத்தில் ஆர்வம் இன்றி தவித்தார். அப்போது தான், ஸ்ரீ பசவேஸ்வர் சதுக்கத்தில் உள்ள ரோட்டரி கார்ப்பரேஷன் நீச்சல் குளத்தில், ஒரு கை இல்லாமல், நீச்சலடித்து கொண்டிருந்தார்.

இதை பார்த்த சர்வதேச நீச்சல் பயிற்சியாளர் உமேஷ் கல்கட்கி, ஸ்ரீதரிடம் பேசிய போது, நீச்சலில் அவருக்கு உள்ள ஆர்வத்தை புரிந்து கொண்டார். நீச்சலில் நுணுக்கங்களை கற்றால், உலகளவில் சாதிக்கலாம் என்று ஸ்ரீதருக்கு ஊக்கம் அளித்தார்.

'கரும்பு தின்ன கூலி வேண்டுமா' என்பது போன்று, பயிற்சியாளரின் அறிவுரையை ஏற்று உடனடியாக 'ஓகே' சொன்னார்.

அன்று முதல் ஸ்ரீதர் நாகப்பா மலகிக்கு ஏறுமுகம் தான். 12 வயதில் உமேஷ் கல்கட்கியின் பயிற்சியின் மூலம், ஒன்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் 41க்கும் மேற்பட்ட தேசிய போட்டிகளில் பங்கேற்றார். இதன் மூலம் 36 தங்கம், 11 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் பெற்று அசத்தி உள்ளார்.

கர்நாடகா கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்லாந்தில் நடந்த 'ரெய்க்ஜாவிக் சர்வதேச விளையாட்டு போட்டி'யில், இந்தியா சார்பில் நீச்சல் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீதர் நாகப்பா மல்கி, புனித் நந்தகுமார், சாஹில் ராஜாராம் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், ஸ்ரீதர் நாகப்பா மலகி, 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக்கில் தங்கப்பதக்கமும்; 50 மீட்டர் பட்டர்பிளை, 100 மீட்டர் பிரீ ஸ்டைல், 400 மீட்டர் பிரீஸ்டைலில் வெள்ளிப் பதக்கங்களும்; 50 மீட்டர் பிரீஸ்டைல், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் வெண்கல பதக்கங்களும் வென்று அசத்தி உள்ளார்.

'பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது இலக்கு' என ஸ்ரீதர் மலகி தெரிவித்தார்.

30_Article_0001 ஐஸ்லாந்தில் நடந்த 'ரெய்க்ஜாவிக் சர்வதேச விளையாட்டு போட்டி'யில் தான் பெற்ற பதக்கங்களுடன் ஸ்ரீதர் நாகப்பா மலகி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us