/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தசரா பட்டத்து யானைகளாக ஸ்ரீகண்டா, ஏகலைவா தேர்வு
/
தசரா பட்டத்து யானைகளாக ஸ்ரீகண்டா, ஏகலைவா தேர்வு
ADDED : செப் 13, 2025 04:55 AM

மைசூரு: மைசூரு தசராவில் பன்னி மரத்திற்கு பூஜை செய்யும் நிகழ்வுக்காக, பட்டத்து யானைகளாக ஸ்ரீகண்டா, ஏகலைவா யானைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
மைசூரு தசராவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி, ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி அன்று நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டு தசராவின்போது, மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள நரசிம்ம சுவாமி கோவிலில் இருக்கும் பன்னி மரத்திற்கு மன்னர் குடும்பம் சார்பில், தினமும் இரவு 7:00 மணிக்கு பூஜை செய்வது உண்டு. அப்போது, நவகிரக தேவதைகள் சிலையை பட்டத்து யானை சுமந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டின் பூஜை வரும் 22ம் தேதி முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை பன்னி மரத்திற்கு மன்னர் குடும்பத்தின் யதுவீர் பூஜை செய்ய இருக்கிறார்.
முதற்கட்டமாக பட்டத்து யானைகளாக ஸ்ரீகண்டா, ஏகலைவா ஆகிய இரு யானைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு யானைகளில் ஒன்றின் மீது நவக்கிர தேவதைகள் சிலை பவனி நடைபெறும்.