/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை 44ம் ஆண்டு விழா எட்டு நாட்கள் வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம்
/
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை 44ம் ஆண்டு விழா எட்டு நாட்கள் வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம்
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை 44ம் ஆண்டு விழா எட்டு நாட்கள் வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம்
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை 44ம் ஆண்டு விழா எட்டு நாட்கள் வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம்
ADDED : ஜூலை 05, 2025 10:59 PM

ஹலசூரு: ஹலசூரு ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம், தொம்மலுார் ஸ்ரீசூர்ய நாராயண சுவாமி கோவில் கல்யாண மண்டபத்தில் நாளை முதல் 14ம் தேதி வரை நடக்கிறது.
பெங்களூரு ஹலசூரில் ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை, தன்னலமற்ற சேவையை வழங்க வேண்டும் என்று நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை சார்பில் பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
நிதி உதவி
'வித்யாபீடம்' திட்டத்தின் கீழ், எட்டு முதல் 12ம் வகுப்பு வரை கல்வியில் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி; 'கோ சம்ரக் ஷணம்' மூலம் கோசாலை பராமரிப்புக்கு நிதியுதவி; 'வேத சம்ரக் ஷணம்' திட்டத்தின் கீழ், வேத மையங்களுக்கு நிதியுதவி வழங்குவதுடன், வேத பாராயண பரப்புதலையும் ஊக்குவிக்கிறது; 'சமஸ்கிருத சம்ரக் ஷணம்' திட்டத்தின் கீழ் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு உதவி வருகிறது.
ஆதரவற்றோர் இல்லம், பார்வையற்றோர் பள்ளி, மூத்த குடிமக்கள் விடுதியினருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
சென்னை நங்கநல்லுாரில் உள்ள பொங்கி மடத்தின் ஸ்ரீஸ்ரீ சாதுராம் சுவாமிகளின் ஆசியுடன், இத்தகைய அறக்கட்டளை சார்பில் வரும் 7 முதல் 14ம் தேதி வரை 'வேத சம்ரக் ஷன கைங்கர்ய மஹோத்சவம்' நடக்கிறது.
கவுரவிப்பு
விழா நாட்களில், வேதங்கள், உபநிடதங்களில் திறமையான அறிவை கொண்ட 1,008 வேத அறிஞர்கள் கவுரவிக்கப்படுவர். இம்மஹோத்சவத்தின்போது, வேதக் கல்வி, உபன்யாசம், பஜனைகளை பரப்புவது தொடர்பாக, பல செயல்பாடுகளும் நடத்தப்பட உள்ளது.
நாளை பிரத்யக் ஷ மஹா கணபதி ஹோமம், ருத்ர ஏகாதசினி, 8ல், ஸ்ரீசுக்த ஹோமம், 9ல் மஹா மிருதுஞ்செய ஹோமம்; 10ல் வேத சம்ரக் ஷண கைங்கர்யத்துக்கான சமக்ர ஹோமம்; 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் இரவில் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதரின் 'ஸ்ரீமான் நாராயணீயம்' சொற்பொழிவு; 11ம் தேதி இரவில் சஹஸ்ர தீப உத்சவம், தீபாராதனை.
ஜூலை 7 முதல் 11ம் தேதி வரை, தினமும் காலையில் பக்தவச்சலம் பாகவதரின் ஸ்ரீமத் பாகவதம் மூல பாராயணம்; மாலையில் சமஸ்டி லலிதா சஹஸ்ரநாம பாராயணம், தீபாராதனை.
வள்ளி கல்யாணம்
வரும் 12ல் சாஸ்தா பிரீத்தி மஹோத்சவம், விக்னேஸ்வர பூஜை, மஹன்யாச பூர்வாக ருத்ராக் ஷம், க்ராமாச்சர்னா, தீபாராதனை; அய்யப்ப சஹஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை, சாஸ்தா பிரீத்தி, அனந்தநாராயணன் தலைமையில் பிரதோஷம் பூஜை குழுவினரின் சாஸ்தா வரவு பாட்டு; மதியம் அன்னதானம்; திருப்புகழ், சைவ திருமுறைகளின் முப்பெரும் விழா.
ஹலசூரு தேவாரம், திருப்புகழ், அருட்பா பாராயண சபையின் ஜூனியர் குழுவினரின் திருப்புகழ் பஜனை; மாலையில் ஹலசூரு சுந்தரேசன் குழுவினரின் திருவருட்பா இன்னிசை வழிபாடு; இரவில் பெங்களூரு ஜெயந்தி குழுவினரின் இன்னிசை உபன்யாச வடிவில் வள்ளி கல்யாணம், வள்ளி கல்யாண மஹோத்சவம்.
வரும் 13ல் சென்னை பவ்யா ஹரிசங்கர் குழுவினரின் திருப்புகழ் பஜனை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அவிநாசி ஓதுவார் குழுவினரின் சைவ திருமுறை இன்னிசை; மாலையில் எர்ணாகுளம் ராதாகிருஷ்ணனின் பஜனை.
சண்டி ஹோமம்
வரும் 14ல் காலை முதல் மதியம் வரை சண்டி ஹோமம் சங்கல்பம், சண்டி பாராயணம், கன்யா, தம்பதி, சுவாசினி பூஜை, மஹாபூர்ணாஹூதி, தீபாராதனை, பகவத் பிரசாதம் வழங்கல்; மாலை முதல் இரவு வரை ஆஞ்சநேய உத்சவம், பூஜை, அர்ச்சனை, ஹனுமன் சாலிசா பாராயணம் நடக்கிறது.
விழா நாட்களில் பூஜைகளுக்கு பின் தீபாராதனை, அன்னதானம், பகவத் பிரசாதம் வழங்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு, அறக்கட்டளை நிர்வாக டிரஸ்டி வெங்கடரமணி 99019 35506, ராமசந்திரன் 89708 81391, ஜெயந்தி 99869 63173, ஸ்ரீதர் 92431 19178, நாகராஜா ராவ் 83109 41015 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கோவில் நிர்வாக டிரஸ்டிகள் மற்றும் உத்சவ கமிட்டியினர் தெரிவித்து உள்ளனர்.