/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை இன்று சஹஸ்ர தீப உத்சவம்
/
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை இன்று சஹஸ்ர தீப உத்சவம்
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை இன்று சஹஸ்ர தீப உத்சவம்
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை இன்று சஹஸ்ர தீப உத்சவம்
ADDED : ஜூலை 11, 2025 04:42 AM

தொம்மலுார்: ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழாவையொட்டி இன்று சஹஸ்ர தீப உத்சவம் நடக்கிறது.
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம், ஸ்ரீசாதுராம் சுவாமிகளின் 25ம் ஆண்டு ஆராதனை இரண்டாம் பாகம் விழா நடந்து வருகிறது.
நேற்று காலையில் வேத அறிஞர்களுக்காக சமக்ரா ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து பக்தவச்சலம் பாகவதரின் பாகவதம் மூல பாராயணம் நடந்தது. வேத அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாலையில் பெண்களின் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடந்தது.
இரவில் ஸ்ரீதுஷ்யந்த் ஸ்ரீதர், ஸ்ரீமன் நாராயணீயம் உபன்யாசம் நடத்தினார். பின், அறக்கட்டளை சார்பில் கவுரவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து தீபாராதனை, பகவத் பிரசாதம் வழங்கப்பட்டது.
குரு பவுர்ணமியையொட்டி, நகரின் பல்வேறு பகுதியில் உள்ள வேத பாடசாலையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். பின், மாணவர்கள் சிவசூத்திரம் பாடினர்.
விபூதிபுரா வீரசிம்மாசன சமஸ்தானம் மடத்தின் வேதம் படிக்கும் மாணவர்கள் அழைத்து வரப்பட்டு, அவர்களை கவுரவித்து அன்னதானம் வழங்கப்பட்டது.
கடந்த நான்கு நாட்களாக வேத அறிஞர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்து வந்தது. இன்றும் வேத அறிஞர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். அத்துடன் மாலையில் சஹஸ்ர தீப உத்சவம் நடக்கிறது. பக்தர்கள் திரளாக பங்கேற்கும்படி அறக்கட்டளையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.