தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய அறிவார்ந்த நிர்வாகம் அவசியம் மாநில தலைமை செயலர் ஷாலினி வலியுறுத்தல்

 குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய அறிவார்ந்த நிர்வாகம் அவசியம் மாநில தலைமை செயலர் ஷாலினி வலியுறுத்தல்

 குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய அறிவார்ந்த நிர்வாகம் அவசியம் மாநில தலைமை செயலர் ஷாலினி வலியுறுத்தல்


ADDED : மே 29, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''குடிநீர் பற்றாக்குறை குறைக்க, திறமையான, வெளிப்படையான, பொறுப்புடன் செயல்படக்கூடிய அறிவார்ந்த நிர்வாக அமைப்பு அவசியம்.,'' என, மாநில தலைமை செயலர் ஷாலினி தெரிவித்தார்.

பெங்களூரு பாப்பண்ணா பிளாக்கின் பல்லாரி சாலையில் உள்ள ஹோட்ட லில், இந்தியாவில் தேசிய ஏ.ஐ., மற்றும் டிஜிட்டல் நீர் உச்சி மாநாட்டை, மாநில தலைமை செயலர் ஷாலினி துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

பெங்களூரு, மைசூரு, மங்களூரு, தார்வாட், பெலகாவி போன்ற நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதை குறைக்க, திறமையான, வெளிப்படையான, பொறுப்புடன் செயல்பட அறிவார்ந்த நிர்வாக அமைப்பு அவசியம்.

நகர்ப்புற பயன்பாட்டு சேவைகளுக்கு, செயற்கை நுண்ணறிவும், டிஜிட்டல் நுண்ணறிவும் விருப்ப தேர்வாக இருக்காது. இனி, நீர் மேலாண்மையின் எதிர்காலத்தை, நிகழ்நேர கண்காணிப்பு, முன் கணிப்பு பகுப்பாய்வு, தேவை, தரவு சார்ந்த நிர்வாகம் ஆகியவை வரையறுக்கும்.

கர்நாடக மாநிலம், ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்களை நிறுவி உள்ளது. டிஜிட்டல் கொள்முதல், தரவு பகிர்வு மற்றும் செயல்திறன் அடிப்படையில், நிர்வாக அமைப்புகளை ஆதரிக்கும் கொள்கை கட்டமைப்புகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

தொழில்நுட்பம், பொது மக்களின் நம்பிக்கையையும், நிறுவனங்களின் செயல் திறனையும் வலுப்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு சார்ந்த நீர் நிர்வாகத்தில், கர்நாடகா பெரும் நம்பிக்கை வைத்து உள்ளது. எதிர்காலத்தின் பயன்பாட்டு வசதி செய்ய வேண்டும் என்று பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் இலக்கு வைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது:

பெங்களூரின் அளவும், சிக்கலான தன்மையும், வழக்கமான பயன்பாட்டு செயல்பாடுகளில் இருந்து முன்கணிப்பு மற்றும் அறிவார்ந்த மேலாண்மை அமைப்புகளுக்கு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இன்று, 14 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோருக்கு குடிநீர் வாரியம் சேவை செய்து வருகிறது. உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. பெங்களூரில் குடிநீரை நிர்வகிக்க, ஆழமான செயல்பாட்டு நுண்ணறிவும், தொழில்நுட்பமும் சார்ந்த நிர்வாகம் அவசியம்.

என்னை பொறுத்த வரை, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் வருவாய் அல்லாத நீரின் பயன்பாடு, 50 சதவீதத்தில் இருந்து, 26.5 சதவீதமாக குறைந்து உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகரம் முழுது ஸ்மார்ட் மீட்டரிங் அமைக்கப்படும். இதன் மூலம் குடிநீர் பயன்பாடு குறையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அசுர வளர்ச்சி அடையும் தொழில்துறைக்கும், தண்ணீர் பற்றாக்குறைக்கும் இடையில் கர்நாடகா உள்ளது. நிலையான மற்றும் சமத்துவமான நகர்ப்புற வளர்ச்சியை உறுதி செய்ய, செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிர்வாகமும், அறிவார்ந்த நீர் அமைப்புகளும் இன்றி அமையாதவை. சிவகுமார், துணை முதல்வர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us