தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாநில காங்., தலைவர் மாற்றமா? வதந்தி என்கிறார் குண்டுராவ்

 மாநில காங்., தலைவர் மாற்றமா? வதந்தி என்கிறார் குண்டுராவ்

 மாநில காங்., தலைவர் மாற்றமா? வதந்தி என்கிறார் குண்டுராவ்


ADDED : மார் 05, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: ''மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் இருக்காது. அப்படி வெளியாகும் தகவல் எல்லாம் வதந்தி,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

தட்சிணகன்னட மாவட்டம், மங்களூரு தாலுகாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் என்ற வதந்திகளுக்கு, என்னால் பதில் அளிக்க முடியாது. மாநில தலைவரான துணை முதல்வர் சிவகுமார் சிறப்பாக பணியாற்றுகிறார். அவரது தலைமையில் தான், நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றோம்.

சுகாதார சேவை மிகவும் அத்தியாவசியமான சேவையாகும். இந்த சேவையை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக டாக்டர்கள் கூறுவது பெரும் பாவச்செயலாகும். ஏற்கனவே டாக் டர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியுள்ளது.

எங்கள் அரசு காலத்தில் மட்டுமின்றி, பல ஆண்டுகளாக அவர்களின் கோரிக்கைகள் இருந்துள்ளன. அதற்காக போராட்டம் என்ற பெயரில், மக்களுக்கு மருத்துவ சேவையை செய்ய முடியாது என்றால், சகிக்கவே முடியாது. மருத்துவ சிகிச்சையை நிறுத்தினால், மாநில அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us