/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பூஜை துவங்கி பில் வரை லஞ்சம் அதிகரிப்பு; மாநில கான்ட்ராக்டர்கள் சங்க தலைவர் புகார்
/
பூஜை துவங்கி பில் வரை லஞ்சம் அதிகரிப்பு; மாநில கான்ட்ராக்டர்கள் சங்க தலைவர் புகார்
பூஜை துவங்கி பில் வரை லஞ்சம் அதிகரிப்பு; மாநில கான்ட்ராக்டர்கள் சங்க தலைவர் புகார்
பூஜை துவங்கி பில் வரை லஞ்சம் அதிகரிப்பு; மாநில கான்ட்ராக்டர்கள் சங்க தலைவர் புகார்
ADDED : ஆக 21, 2025 06:58 AM
ஷிவமொக்கா : ''பணி துவங்குவதற்கு மு ன் செய்யப்படு ம் பூஜை முதல் பில் தொகை பெறும் வரை அனைத்தையும் கணக்கிட்டால், முந்தைய அரசை விட, இந்த அரசில் ஊழல் அதிகரித்து உள்ளது,'' என கான்ட்ராக்டர்கள் சங்க மாநில தலைவர் மஞ்சுநாத் தெரிவித்தார்.
ஷிவமொக்காவில் அவர் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவில் நீர்ப்பாசனம், பொதுப்பணி துறைகளில் இருந்து 8,000 முதல் 9,000 கோடி ரூபாய் பில்கள்; சிறிய நீர்ப்பாசன துறையில் 12,000 கோடி ரூபாய் உட்பட ஒன்பது துறைகளில் மொத்தம் 32,000 கோடி ரூபாய்க்கான பணிகள் செய்ததற்கான பில் தொகை நிலுவையில் உள்ளன.
இந்த அரசின் கீழ், ஒப்பந்தாரர்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர். முந்தைய அரசை விட அதிக கமிஷன் வாங்குகின்றனர். ஒப்பந்தாரர்களின் நிலுவையில் உள்ள பில் தொகையை செலுத்துவதாக கூறி, இரண்டரை ஆண்டுகளாகிவிட்டன. இதுவரை 20 சதவீதம் தொகை மட்டுமே வந்து உள்ளது.
பணி துவங்குவதற்கு முன் செய்யப்படும் பூஜை முதல் பில் தொகை பெறும் வரை அனைத்தையும் கணக்கிட்டால், முந்தைய அரசை விட, புதிய அரசில் ஊழல் அதிகரித்து உள்ளது. இதை கணக்கிட்டால் 40 சதவீத லஞ்சம் குற்றச்சா ட்டு பொய்யல்ல.
பெங்களூரில் பணிகளுக்கான டெண்டரில் குறிப்பிட்ட தொகையை விட குறைவாக குறிப்பிடும் கான்ட்ராக்டர்களுக்கு, நகர மேம்பாட்டு துறை அமைச்சர் பைரதி சுரேஷ் சொல்லும் நபருக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக அவரிடமும் பேசி உள்ளோம். நிலுவையில் உள்ள எங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.