/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துமகூரு ரயில் நிலைய பெயர் மாற்றம் மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம்
/
துமகூரு ரயில் நிலைய பெயர் மாற்றம் மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம்
துமகூரு ரயில் நிலைய பெயர் மாற்றம் மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம்
துமகூரு ரயில் நிலைய பெயர் மாற்றம் மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம்
ADDED : ஏப் 14, 2025 08:48 AM

துமகூரு : துமகூரு ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்வது குறித்து, மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதி உள்ளது.
துமகூரு ரயில் நிலையத்திற்கு, மறைந்த சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சுவாமிகளின் பெயரை சூட்டும்படி பலரும் கோரி வந்தனர். மடாதிபதியின் பெயரை சூட்டுவது குறித்து, முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசிக்கப்படும் என சமீபத்தில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியிருந்தார்.
துமகூரு ரயில்வே நிலையத்தின் பெயரை மாற்றம் செய்வதற்கு மாநில அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த 8ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகங்களை சேர்ந்த மக்களின் அன்பை பெற்றவர் சிவகுமார சுவாமிகள். சித்தகங்கா மடம் உணவு, உறைவிடம், கல்வி ஆகியவற்றை தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கி உள்ளது.
சுவாமிகள் 87 ஆண்டுகளாக மக்கள் சேவை ஆற்றியவர். 'நடமாடும் கடவுள்' என கூறப்பட்டார். இம்மடத்திற்கு வராத தலைவர்கள் இல்லை. ஜனாதிபதிகள், பிரதமர்கள் பாராட்டி உள்ளனர்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, துமகூரு ரயில் நிலையத்தை, டி.கே., என்ற குறியீட்டுடன் டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகள் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

