/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநில தலைவர் பத வி ராஜினாமா : சிவகுமார் 'சூசகம்'
/
மாநில தலைவர் பத வி ராஜினாமா : சிவகுமார் 'சூசகம்'
ADDED : மார் 18, 2025 05:03 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில் 100 காங்கிரஸ் அலுவலகங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை துவக்கிவைத்த பின், எனக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்பில் இருந்து விடுபடுவேன்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று மாநில காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் தலைவராக மஞ்சுநாத் கவுடா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
தலைவர் பதவியில் இருந்து விலகும் முகமது ஹாரிஸ் நலபாட், துணை முதல்வரும், மாநில தலைவருமான சிவகுமார் முன்னிலையில், மஞ்சுநாத் கவுடாவிடம் கட்சிக்கொடியை வழங்கினார்.
இதன்பின் பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சிவகுமார், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக பதவியேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தாலுகா பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் நடக்க உள்ளன. அதுவரை மாநில தலைவர் மாற்றம் குறித்து பேச வேண்டாமென, கட்சி தலைமை அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவதற்குள் 100 காங்கிரஸ் அலுவலகங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் அடுத்த ஒரு மாதத்தில் நடக்க உள்ளன. இவை முடிந்தவுடன், எனக்கு அளித்திருந்த மிகப்பெரிய பொறுப்பில் இருந்து விடுபட உள்ளேன். அந்த பொறுப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை அவர் சாதாரணமாக கூறியிருந்தாலும், கிராம பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக கட்சி அளவில் இதுவரை எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை.
மாநில தலைவரை மாற்றும்படி கூறி வந்த அமைச்சர்கள் சிலரும், அவரை மாற்ற வேண்டாம் என்று கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே வேளையில், 'அக்டோபர் வரை மாநில தலைவரை மாற்ற வேண்டாம்' என, சிவகுமார் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.