/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலாரில் திருட்டு போன ரூ.2.57 கோடி பொருட்கள் மீட்பு
/
கோலாரில் திருட்டு போன ரூ.2.57 கோடி பொருட்கள் மீட்பு
கோலாரில் திருட்டு போன ரூ.2.57 கோடி பொருட்கள் மீட்பு
கோலாரில் திருட்டு போன ரூ.2.57 கோடி பொருட்கள் மீட்பு
ADDED : டிச 31, 2025 07:02 AM

கோலார்: கோலார் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 2025ல் பதிவான பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம், வெள்ளி, மொபைல் போன்கள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உட்பட பொருட்களை போலீஸ் மாவட்ட எஸ்.பி., நிகில் தலைமையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன் பின்னர் அவர் அளித்த பேட்டி:
2025ல் மாவட்டத்தில் திருடப்பட்டு மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 4.32 கோடி ரூபாய். இதில், திருட்டுப்போன 4 61 மொபைல் போன்கள், 1.813 கிலோ தங்கம், 3.143 கிலோ வெள்ளி, 7.62 லட்சம் ரூபாய் ரொக்கம், 1,460 கிலோ சந்தன துண்டுகள், 25 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
போதை பொருள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 30 வழக்குகளில் 1.42 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சில உரிமையாளர்கள் தங்கள் பொருட்களை வாங்க வரவில்லை. மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 2.57 கோடி ரூபாய்.
சைபர் கிரைம் வழக்குகளில் நீதிமன்றத்தின் அனுமதியுடன், 34.60 லட்சம் ரூ பாயை இழந்தவர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி உள்ளோம்.
சைபர் குற்ற வழக்குகளில் போதை பொருள், கஞ்சா, வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளோம். இதன் 9.09 கோடி ரூபாய். திறம்பட பணியாற்றிய போலீஸ் துறை அதிகாரிகள், போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

