உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வினோத 'பார்ட்டி'க்கு தடை
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வினோத 'பார்ட்டி'க்கு தடை
ADDED : ஆக 29, 2026 11:19 PM
பெங்களூரு: உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வினோத 'பார்ட்டி'க்கு உணவு பாதுகாப்பு, மருந்து கட்டுப்பாட்டுத்துறை தடை விதித்து உள்ளது.
பெங்களூரு கோரமங்களாவில்'பெப்டைட் பார்ட்டி'எனும் வினோத பார்ட்டி நேற்று நடக்கவிருந்தது. இதை, 'அப்சர்ஜ் லேப்ஸ்' என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த பார்ட்டியில் பங்கேற்போர் அமிலங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பானத்தை குடிப்பதால் வயதான தோற்றம் ஏற்படாது என தனியார் நிறுவனம் தெரிவித்தது.
இந்த வினோத பார்ட்டிக்கு கர்நா டக உணவு பாதுகாப்பு, மருந்து கட்டுப்பாட்டு துறை தடை விதித்துள்ளது. இது குறித்து, துறை கூறியதா வது:
இந்த பார்ட்டியில் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்ட அமிலங்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன. இவற்றை குடிப்பதால் வயதான தோற்றம் ஏற்படாது என்பதற்கான அறிவியல் சான்று ஏதேனும் உள்ளதா...
அறிவியல் ஆதாரமின்றி அமிலங்களால் தயாரிக்கப்பட்ட பானத்தை குடிப்பதால் உடலில் பாதிப்புகள் ஏற்படும். எனவே, பார்ட்டி நடத்த தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
