தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஆக 29, 2026 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 11:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ராகவேந்திர சுவாமி ஆராதனை

 335 வது ராகவேந்திர சுவாமி ஆராதனையை ஒட்டி, மத்யாராதனை - காலையில். இடம்: ஸ்ரீ சீனிவாசா கோவில், சுவாமி விவேகானந்தா சாலை, முதல் பிளாக், ராமகிரு ஷ்ணா நகர், மைசூரு.

சொற்பொழிவு

 கொல்கட்டா ராமகிருஷ்ணா மடத்தின் மடாதிபதி சுவாமி விமலாத்மானந்தா சுவாமிகளின் சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: ராமகிருஷ்ணா ஆசிரமம், மைசூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

கண்காட்சி

 பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு.

நாடக பயிற்சி முகாம்

 கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக் கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76 187 39343. தொடர்புக்கு ngma.bengaluru@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இசை

 கன்னடா ஜாமிங் - இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

 ஓணம் நைட் - இரவு 8:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: பட் பீ ரெஸ்டோ பார், 65, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 ஓணம் பாஷ் பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: பனாசியா லாஞ்சு அண்ட் ரெஸ்டோ பார், 35, இரண்டாவது தளம், மாரத்தஹள்ளி.

காமெடி

 வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us