/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு பூங்காக்களில் தெரு நாய்கள் தொல்லை
/
பெங்களூரு பூங்காக்களில் தெரு நாய்கள் தொல்லை
ADDED : ஜூலை 31, 2025 05:54 AM
பெங்களூரு : பெங்களூரின் பூங்காக்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பதால், நடைப்பயிற்சிக்குச் செல்ல முடியாமல், மூத்த குடிமக்கள் அவதிப்படுகின்றனர்.
பெங்களூரின் கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, பல்வேறு பூங்காக்களில் மூத்த குடிமக்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்கின்றனர்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பலருக்கும், பூங்காவில் பொழுதுபோக்குவது விருப்பமான விஷயமாகும். நடைபயிற்சிக்கு வந்து, அறிமுகம் உள்ளவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இப்போது பூங்காக்களுக்கு செல்லவே, மூத்த குடிமக்கள் அஞ்சுகின்றனர். தெரு நாய்களின் தொந்தரவே காரணம்.
நடைபயிற்சி செய்யும்போது, தெருநாய்கள் விரட்டி வருகின்றன. இதே காரணத்தால், பூங்காவுக்கு செல்லவே மூத்த குடிமக்கள் தயங்குகின்றனர். சிறார்களும் கூட பூங்காவுக்கு வருகின்றனர். இவர்களுக்கும் தெரு நாய்கள் அச்சுறுத்தலாக உள்ளன.
பெங்களூரு மாநகராட்சியிடம், பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சாலைகளில் செல்வோரை மட்டுமின்றி, பூங்காக்களிலும் தெரு நாய்கள் மக்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றன.
சிறார்களையோ, மூத்த குடிமக்களையோ கடித்தால் என்ன கதி என, கேள்வி எழுப்பியுள்ளனர். பூங்காக்களுக்குள் நாய்கள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகின்றனர்.