தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாணவி

 ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாணவி

 ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாணவி


ADDED : மார் 19, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: விபத்தில் சிக்கிய மாணவி ஒருவர், ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதினார்.

தங்கவயல், சின்னகான ஹள்ளியை சேர்ந்த சங்கரப்பாவின் மகள் குஸ்மா, 15. இவர் தங்கவயல் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி. சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கினார். இவருக்கு கால், இடுப்பு, முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப் பட்டிருந்தது.

'காயம் ஆறிய பின் மேலும் இரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருந்தனர். இதனால், மாணவி குஸ்மா, வீட்டில் படுத்தபடியே படித்து எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு தயாரானார்.

அவரது தாய், வட்டார கல்வி அதிகாரி நாராயணசாமியை சந்தித்து, தன் மகள் தேர்வு எழுத உதவுமாறு கோரினார். இதற்கு அவரும் அனுமதி அளித்தார்.

இதன்படி, நேற்று காலை வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தங்கவயல் சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் தேர்வு மையத்துக்கு மாணவியை அழைத்து வந்தனர்.

அங்கு வட்டார கல்வி அதிகாரி நாராயணசாமி, பள்ளி தலைமை ஆசிரியை சிஸ்டர் மேரி ஆகியோர், மாணவிக்கு தனி அறை ஏற்பாடு செய்து, தேர்வு எழுத வைத்தனர். கேள்விகளுக்கான பதிலை மாணவி சொல்ல, உதவியாளர் ஒருவர் எழுதினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us