தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காதலிக்கும்படி தொல்லை மாணவி தற்கொலை

காதலிக்கும்படி தொல்லை மாணவி தற்கொலை

காதலிக்கும்படி தொல்லை மாணவி தற்கொலை


ADDED : மார் 23, 2025 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கதக் : தன்னை காதலிக்கும்படி தொந்தரவு கொடுத்ததால், மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கதக் மாவட்டம், முன்டரகி தாலுகாவின் விரபாபுரா கிராமத்தில் வசித்தவர் வந்தனா, 19. இவர் கதக் நகரின், ஜிம்ஸ் கல்லுாரியில் பாரா மெடிக்கல் படித்து வந்தார். சமூக நலத்துறைக்கு உட்பட்ட பெடகேரி அம்பேத்கர் அரசு விடுதியில் தங்கியிருந்தார்.

இதே கிராமத்தை சேர்ந்த கிரண் காரபாரி, 42, வந்தனாவை ஒரு தலையாக காதலித்தார். அவரை பின் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தினார். தினமும் போன் செய்து தொந்தரவு செய்தார்.

திருமணம் செய்து கொள்ளாவிட்டால், மாணவியின் போட்டோவை எடிட் செய்து, சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், கிரணை கண்டித்தனர். அப்போதும் தன் போக்கை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

இவரது தொந்தரவால் மனம் வெறுத்த வந்தனா, நேற்று முன் தினம் விடுதி அறையில், பினாயில் குடித்தார். மயங்கிக் கிடந்த இவரை, விடுதி ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

தங்கள் மகளின் இறப்புக்கு காரணமான கிரண் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, பெடகேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். போலீசாரும் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us