/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
12வது மாடியில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு
/
12வது மாடியில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு
ADDED : ஜூன் 13, 2025 11:10 PM

மங்களூரு: அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழந்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு புறநகரில் உள்ள, குத்தாரில், 18 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், 12வது மாடியில் வசிப்பவர் கமர்ஜா. இவரது மனைவி மும்தாஜ். இவர்கள் இருவருமே டாக்டர்கள். மங்களூரின், தேரளகட்டேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகின்றனர்.
தம்பதிக்கு ஹிபா ஐமன், 15, என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். மகள், பிரபலமான பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தார். மருத்துவமனையில் அவசரப் பணி இருந்ததால், தம்பதி நேற்று காலையே மருத்துவமனைக்கு சென்றனர். இவரது மகனும், மகளும் வீட்டில் இருந்தனர்.
ஹிபா ஐமன், துவைத்த துணிகளை வீட்டின் பால்கனியில் உள்ள கொடியில், ஸ்டூலில் நின்றபடி உலர்த்திக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, உல்லால் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகி, விசாரணை நடக்கிறது.