/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிய மாணவி
/
அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிய மாணவி
ADDED : செப் 06, 2025 06:46 AM
பெலகாவி: அரசு மருத்துவமனையில், மூன்று மாதங்களாக தனியார் மருத்துவ கல்லுாரி மாணவி, நர்ஸ் வேடமணிந்து பணியாற்றியது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெலகாவி மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் ஒரு இளம்பெண், நர்ஸ் வேடத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். பாதுகாப்பு ஊழியர், நேற்று முன் தினம் மதியம் இப்பெண்ணை கவனித்தார். அவரிடம் விசாரித்தபோது, மழுப்பலாக பேசினார்.
பாதுகாப்பு ஊழியர் உடனடியாக டாக்டர்களிடம் தெரிவித்தார். அவர்கள் அப்பெண்ணிடம் விசாரித்தனர். அவர் தனியார் மருத்துவ கல்லுாரி மாணவி சனா ஷேக் என்பதும், உத்தரகன்னடாவின் கார்வாரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.
முறையான பயிற்சியின்றி நர்சாக, மருத்துவமனையின் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். 'அவரை மருத்துவமனையில், பணிக்கு நியமித்தது யார்?' என, விசாரித்தபோது, மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவரின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
மூன்று மாதங்களாக அவர் அங்கு நடமாடியும், மருத்துவமனை டாக்டர்களோ அல்லது நிர்வாகத்தினரோ கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததை, பொது மக்கள் கண்டித்துள்ளனர். 'இவரது தவறான சிகிச்சையால், நோயாளிகளுக்கு ஏதாவது அபாயம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு?' என, கேள்வி எழுப்பியுள்ளனர்.