தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாய் இறந்த சோகத்தில் தேர்வு எழுதிய மாணவர்

தாய் இறந்த சோகத்தில் தேர்வு எழுதிய மாணவர்

தாய் இறந்த சோகத்தில் தேர்வு எழுதிய மாணவர்


ADDED : மார் 22, 2025 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2025 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொப்பால், கேசரஹட்டி தாலுகாவில் உள்ள சுவாமி விவேகானந்தா ஆங்கில வழி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் அடிவேய சாமி. இவரது தாய் விஜயலட்சுமி சித்தையா சாமி, 38.

சில நாட்களுக்கு முன்பு குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில், விஜயலட்சுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஹூப்பள்ளியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவர் தலையில் ரத்தம் உறைந்திருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். இதன் காரணமாக, கடந்த வியாழக்கிழமை இரவு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதை அறிந்த விஜயலட்சுமியின் மகன் கதறி அழுதார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் செல்லும்போது தாய் இறந்ததால் மனம் நொந்தார்.

அவரது தாய் இறந்ததை அறிந்த அவரது ஆசிரியர், மாணவரின் வீட்டிற்கு வந்து, மாணவரை சமாதானப்படுத்தி, ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தினருடன் பேசி, அவரை பொதுத்தேர்வு எழுத அழைத்து வந்தார்.

தாய் இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவர், தேர்வு முடிந்த பிறகு தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தாய் இறந்த சோகத்தில் தேர்வு எழுதிய மாணவர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us