தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/விடுமுறை கேட்ட மாணவர்களை அடைத்து வைத்து சித்ரவதை

விடுமுறை கேட்ட மாணவர்களை அடைத்து வைத்து சித்ரவதை

விடுமுறை கேட்ட மாணவர்களை அடைத்து வைத்து சித்ரவதை


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எலஹங்கா: தசரா விடுமுறை கேட்ட மாணவர்களை, கல்லுாரி நிர்வாகத்தினர் அறையில் அடைத்து வைத்து மிரட்டியதுடன், டி.சி., வழங்கியுள்ளனர். அந்த கல்லுாரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு எலஹங்காவின் கோகிலு சாலையில் தனியார் பி.யு.சி., கல்லுாரி உள்ளது. தசராவை முன்னிட்டு, அக்டோபர் 13 முதல், 21 வரை, மாநில அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கல்லுாரி நிர்வாகத்தினர், திடீரென விடுமுறையை ரத்து செய்தனர். இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள், அக்டோபர் 13ல் விடுமுறை அளிக்கும்படி போராட்டம் நடத்தினர்.

மறுநாள் காலையில் கல்லுாரிக்கு வந்த, 15 முதல், 20 மாணவர்களை, கணினி வகுப்பறையில், கல்லுாரி நிர்வாகத்தினர் அடைத்து வைத்தனர். அடையாள அட்டைகளை பறித்து கொண்டு, மாலை வரை அறையில் மண்டியிட்டு அமர வைத்திருந்தனர்.

கல்லுாரி தொடர்பாக, சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்திருந்த படங்கள், வீடியோக்களை அழிக்கும்படி வலியுறுத்தினர். மாணவர்களுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டனர். ‘விடுமுறை கேட்க மாட்டோம்’ என, மாணவர்கள் கூறியும், நிர்வாகத்தினர் பொருட்படுத்தவில்லை.

மேலும், குண்டர்களை வரவழைத்து, மாணவர்களை மிரட்டியுள்ளனர். மாலையில் வீட்டுக்கு அனுப்பினர். மறுநாள் மின்னஞ்சல் வழியாக, மாணவர்களுக்கு இடமாற்று சான்றிதழை அனுப்பியுள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் பெற்றோர், எலஹங்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் கல்லுாரி நிர்வாகத்தினர் மீது, வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us