தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பணியிடத்தின் அருகில் இருப்பது கட்டாயம் ஊழியர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவு

பணியிடத்தின் அருகில் இருப்பது கட்டாயம் ஊழியர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவு

பணியிடத்தின் அருகில் இருப்பது கட்டாயம் ஊழியர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவு


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அரசின் வளர்ச்சி பணிகளும், பொது சேவைகளும் மக்களை சென்றடைய வசதியாக, அதிகாரிகளும், ஊழியர்களும் தாங்கள் பணியாற்றும் இடத்தின் அருகில் வசிப்பதை, அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இது குறித்து, அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பொதுச்சேவைகள் பயனாளிகளை எளிதில் சென்றடைய வேண்டும். எனவே, அதிகாரிகளும் ஊழியர்களும் தாங்கள் பணியாற்றும் இடத்தின் அருகே வசிப்பது கட்டாயம். இதை உறுதிப்படுத்தி கொள்ளும் நோக்கில், கர்நாடக அரசு ‘ஜியோ பென்சிங்’ தொழில்நுட்பம் கொண்ட, ‘கர்தவ்யா’ என்ற செயலியில், வருகை பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது.

முதற்கட்டமாக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றும் அனைத்து டாக்டர்களும், இரவு நேரம் வருகை பதிவு செய்வது, வரும் நவம்பர் 1ம் தேதி முதல் கட்டாயமாகும்.

தினமும் இரவு 9:00 மணிக்கு பின், டாக்டர்கள் தாங்கள் பணியாற்றும் இடத்தின் அருகில் இருந்து, கர்தவ்யா செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

முறைப்படி அனுமதி பெற்று, விடுமுறையில் இருப்போர், சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெற்று, பணியிடத்தின் மத்திய பகுதியில் இருந்து, தொலைவில் இருப்போர், வேறு இடத்துக்கு செல்ல முன் கூட்டியே அனுமதி பெற்றுள்ள அதிகாரிகள், ஊழியர்களுக்கு செயலியில் பதிவு செய்வதில் இருந்து, விலக்கு அளிக்கப்படும்.

உப லோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வின் போது, அதிகாரிகள், ஊழியர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் இருந்து, தொலைவில் உள்ள ஊர்களில் வசிக்கின்றனர். அவர்கள் சரியான நேரத்தில், பணிக்கு வராததால் பொதுமக்கள் பாதிப்படைவது தெரிந்தது.

மக்களின் வசதிக்காக முதல்வரிடம் ஒப்புதல் பெற்று, இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. சோதனை முறையில், சுகாதாரத்துறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வெற்றியை கவனித்து, மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இதுவரை அனைத்து துறைகளின், நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே, கர்தவ்யா செயலியில் வருகை பதிவு செய்வது கட்டாயமாக இருந்தது. இது ஒப்பந்த ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.

அரசு துறைகளில் பணியாற்றும், அனைத்து ஒப்பந்த ஊழியர்களை, நவம்பர் 25க்குள் கர்தவ்யா செயலியில், பதிவு செய்து கொள்ளும்படி, அந்தந்த துறைகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 2027ன் ஜனவரி 1 முதல், கர்தவ்யா செயலியில் பெற்ற அறிக்கை அடிப்படையில், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். செயலியில் பதிவு செய்யாதவர்களுக்கு, ஊதியம் வழங்க கூடாது என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us