/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலி சான்றிதழ்கள் மாணவர்கள் போராட்டம்
/
போலி சான்றிதழ்கள் மாணவர்கள் போராட்டம்
ADDED : செப் 24, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : 'கர்நாடகாவில் உள்ள பல்கலைக் கழகங்களின் விருந்தினர் விரிவுரையாளர் பணிக்கு போலி ஆவணங்களை கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அனைத்து கர்நாடக மாணவர் சங்கத்தினர் நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தினர்.
அப்போது, 'விருந்தினர் விரிவுரையாளர் பணி நியமனத்தில் யு.ஜி.சி., விதிகளை உயர்கல்வி துறை பின்பற்றவில்லை. முதுகலை, டாக்டரேட் என, போலி சான்றிதழ்களை கொடுத்து ஏராளமானோர் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர்.