/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளி செல்லும் வழியில் பள்ளம் மாணவர்கள் கடும் அவதி
/
பள்ளி செல்லும் வழியில் பள்ளம் மாணவர்கள் கடும் அவதி
பள்ளி செல்லும் வழியில் பள்ளம் மாணவர்கள் கடும் அவதி
பள்ளி செல்லும் வழியில் பள்ளம் மாணவர்கள் கடும் அவதி
ADDED : செப் 20, 2025 04:54 AM

ஆவலஹள்ளி: பள்ளிக்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டப்பட்டதால், மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
பெங்களூரின் எலஹங்கா ஆவலஹள்ளியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. பள்ளியின் அருகே வசந்தா என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தின் வழியாக தினமும் பள்ளி வாகனம் செல்கிறது.
கடந்த 2017ம் ஆண்டு வசந்தாவுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. தன் நிலத்தின் வழியாக பள்ளி வாகனம் செல்ல, வசந்தா எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் வாகனம் சென்று வரும் இடம், தங்களுக்கு உரியது என்று பள்ளி நிர்வாகம் கூறியது. இதுதொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, நிலத்தின் வழியாக பள்ளி வாகனம் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.
ஆனால் இந்த தீர்ப்பு பற்றி அறியாத வசந்தா, நேற்று முன்தினம் இரவு, பள்ளி வாகனம் செல்லும் வழியில், பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டினார்.
நேற்று காலையில் பள்ளி குழந்தைகளுடன் வேன் வந்தபோது, பள்ளம் இருந்ததால் செல்ல முடியவில்லை. இதனால் மாணவர்கள் வேனில் இருந்து இறங்கி சேறும், சகதியுமாக இருந்த சாலையில் நடந்து சென்றனர்.
பள்ளி நிர்வாகத்தின் வக்கீல், நீதிமன்ற உத்தரவை வசந்தாவிடம் காட்டினார். இதையடுத்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து, தோண்டப்பட்ட பள்ளத்தை, வசந்தா மூடினார். பின், அந்த வழியாக வழக்கம்போல பள்ளி வாகனங்கள் சென்றன.