ADDED : மே 16, 2026 03:37 AM
அ நிறம் | அளவு
தங்கவயல்: மின் தடையை போக்க, சீனிவாசசந்திரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேல் பள்ளி கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு நடந்தது.
சீனிவாசசந்திரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 30 கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள், மின் துறையிடம் பல முறை புகார் செய்தனர்.
தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூ பகலா தலைமையில் மேல்பள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 2.25 ஏக்கர் நிலத்தில் 66/11 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க இடத்தை நேற்று தேர்வு செய்தனர்.
இங்கு, 12 கோடி ரூபாய் செலவில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்தால் 30 கிராமங்களில் தடையின்றி மின் சப்ளை செய்யப்படும் என மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
