/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராணுவ வீரர் நலனுக்காக உடுப்பியில் சுதர்சன யாகம்
/
ராணுவ வீரர் நலனுக்காக உடுப்பியில் சுதர்சன யாகம்
ADDED : மே 18, 2025 10:43 PM
உடுப்பி : இந்திய ராணுவ வீரர்கள் நலன் காக்க, உடுப்பி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுதர்சன யாகம் நடத்தப்பட்டது.
நாட்டை பாதுகாக்க, இந்திய ராணுவ வீரர்கள் நலன் காக்க, உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீவிஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் முடிவு செய்தார். அவரின் வழிகாட்டுதல்படி, முச்சுலுகோடுவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுதர்சன யாகம் நடத்தப்பட்டது.
யாகத்துக்கு பின் மடாதிபதி கூறுகையில், ''தெய்வீக படையின் தளபதியான சுப்பிரமணியரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த யாகத்தின் முழு பலனும், நாட்டின் எல்லையை காக்கும் வீரர்களின் நலனுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.