sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெங்., - ஓசூர் சாலையில் திடீர் பள்ளம் 8 கி.மீ., துாரம் போக்குவரத்து நெரிசல்

/

 பெங்., - ஓசூர் சாலையில் திடீர் பள்ளம் 8 கி.மீ., துாரம் போக்குவரத்து நெரிசல்

 பெங்., - ஓசூர் சாலையில் திடீர் பள்ளம் 8 கி.மீ., துாரம் போக்குவரத்து நெரிசல்

 பெங்., - ஓசூர் சாலையில் திடீர் பள்ளம் 8 கி.மீ., துாரம் போக்குவரத்து நெரிசல்

1


ADDED : பிப் 05, 2026 06:55 AM

Google News

ADDED : பிப் 05, 2026 06:55 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சந்தாபுரா : பெங்களூரு - ஓசூர் சாலையில் விழுந்த திடீர் பள்ளத்தால், எட்டு கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கர்நாடகா - தமிழக எல்லையில் உள்ள ஓசூரில் இருந்து, பெங்களூருக்கு தினமும் ஏராளமானோர் வேலை, மருத்துவ காரணங்களுக்காக வருகின்றனர். இதனால் பெங்களூரு நகரில் இருந்து, ஓசூர் செல்லும் சாலை எப்போதும், பரபரப்பாகவே இருக்கும்.

ஓசூர் சாலையின் சந்தாபுராவில் இருந்து அத்திப்பள்ளி வரை 8 கி.மீ., துாரத்தில் உள்ள சாலையில், மூன்று இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறது. ஆறு மாதங்களாக நடக்கும், இந்த பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. இதனால் தினமும் இந்த சாலையில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய சந்தாபுராவில், சுரங்கப்பாதை பணிகள் நடக்கும் இடத்தில், சாலையில் திடீரென பெரிய பள்ளம் விழுந்தது. பள்ளம் விழுந்த இடத்தின் அருகில், இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டன. பள்ளம் விழுந்த இடத்தை ஒட்டி சென்ற சாலை வழியாக, வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

அந்த சாலை மிகவும் குறுகலாக இருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 8 கி.மீ., துாரத்திற்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலை யின் இருபக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலை பள்ளம் விழுந்த இடத்தில், மண்ணின் தரம் குறைவாக இருந்ததாலும், அங்கு பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்தியதால் பள்ளம் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

'சாலை யில் பள்ளம் விழுந்ததற்கு, தேசிய நெடுஞ்சாலை துறையினர் அலட்சியமே காரணம்' என்று, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர்.






      Dinamalar
      Follow us