/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்கிரசுக்கு சுதாகர் போக மாட்டார்
/
காங்கிரசுக்கு சுதாகர் போக மாட்டார்
ADDED : பிப் 11, 2025 06:37 AM

பெங்களூரு: “எந்த காரணத்தை கொண்டும், எம்.பி., சுதாகர் காங்கிரசுக்கு திரும்பிச் செல்ல மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது,” என பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சுதாகர் அனுபவம் மிக்க அரசியல்வாதி. தற்போது எம்.பி.,யாகவும் இருக்கிறார். மாவட்ட தலைவரை மாற்ற முடிவு செய்தால், சுதாகரின் ஆலோசனை கேட்டறிய வேண்டும். இவர் எந்த காரணத்தை கொண்டும், காங்கிரசுக்கு செல்ல மாட்டார்.
காங்கிரசில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. ஆனால் அவர்களுக்கு எங்கள் கட்சியில் அதிக குழப்பம் உள்ளதாக தோன்றுகிறது. காங்கிரசில் எப்போது, என்ன வேண்டுமானாலும் நடக்கும் சூழ்நிலை உள்ளது. முதல்வர் சித்தராமையாவை சி.பி.ஐ., கைது செய்ய வேண்டும் என, அவரது கட்சியினரே காத்திருக்கின்றனர்.
காங்கிரசில் சித்தராமையா இல்லையென்றால், ஆறு மாதங்களில் தேர்தல் வரும். அதற்கு நாங்கள் தயாராக வேண்டும். பரஸ்பரம் மனக்கசப்பை விட்டு விட வேண்டும். காங்கிரஸ் வலுவானதற்கு காரணம் சித்தராமையா. இவரது சக்தியை நான் பார்த்திருக்கிறேன். அவர் 11 கே.வி.மின்சாரம் அல்ல. 650 கே.வி., மின்சாரம்.
அவரை தொட்டால் எரிந்து போவர். நானும் அவருடன் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் இருந்தால் மக்கள் வருவர். இல்லையென்றால் பணம் கொடுத்து, மக்களை அழைத்து வந்து அமர்த்த வேண்டும்.
எங்கள் கட்சியில் சில மாதங்களாக, மாநிலத் தலைவர் பதவி குறித்து, சர்ச்சை நடக்கிறது. மாநிலத் தலைவருக்கு எதிராக, எத்னால் பேசுகிறார்.
மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்கிறார். கட்சி மேலிடம், இரண்டு தலைவர்களையும் ஒன்றாக அமர்த்திப் பேசவில்லை. இதனால் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படுகிறது. உட்கட்சிப் பூசலை சரி செய்யாவிட்டால், பா.ஜ.,வுக்கு நெருக்கடி ஏற்படும். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஆளுங்கட்சியை விட, எதிர்க்கட்சிகள் பற்றிய செய்திகள், ஊடகங்களில் அதிகம் வருகிறது. இனியாவது மேலிடம் கட்சியின் குழப்பங்களை சரி செய்ய வேண்டும்.
பெங்களூரின் மூத்த எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட, அனைவரையும் அமர்த்திப் பேச வேண்டும். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

